Saturday, 30 November 2013

மலேரியா காய்ச்சலை குணமாக்கும் -ஜ்வர முராரி



மலேரியா காய்ச்சலை குணமாக்கும் -ஜ்வர முராரி (JWARA MURARI )
                                                                                           
தேவையான மருந்துகள்:
1.            சுக்கு சுந்தீ                           10 கிராம்
2.            மிளகு மரீச்ச                        10           “
3.            திப்பிலி பிப்பலீ                      10           “
4.            நிலவேம்பு பூநிம்ப                    10           “
5.            கடுகரோஹிணீ கடுகீ                  10           “
6.            ஏலக்காய் (தோல் நீக்கியது) ஏலாபீஜ   10           “

இவற்றைப் பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும்

7.            பொடித்துப் பொரித்த வெங்காரம் டங்கண பஸ்ம   10 கிராம்
8.            சலித்த சிங்கோனாத்தூள் சிங்கோனா (Chinchona)           30           “


செய்முறை:     

இவற்றைக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     
ஒரு மாத்திரை தேன் அல்லது இஞ்சிச் சாற்றுடன் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


எளிய சுரம் (ஸ்வரம்), முதல் குளிர் ஜ்வரம், முறைக் காய்ச்சல் (மலேரியா) போன்ற பலவிதமான காய்ச்சல்கள் (விஷமஜ்வர / சதுர்த்திகா விஷமஜ்வர), பசியின்மைக்கு (அக்னிமாந்த்ய) இஞ்சிச்சாறு, தேன், மிளகுக் கிழாயத்துடன் கொடுக்க நலம் பயக்கும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. மலேரியா காய்ச்சலை குணமாக்க இந்த மருந்து நன்றாக உதவும் 
  2. வாத நீர் காய்ச்சலுக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம் 
  3. குளிர் காய்ச்சலுக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம் 
  4. ஆங்கில மருந்தென்று சொல்லப்படும் க்லோரோ குயின் மருந்து போல் இது வேலை செய்யும் 

Sunday, 24 November 2013

கீரைகள்

கீரைகள்
உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவேதான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

தூதுவளை :
செவிமந்தம், செவி அழற்சி, காசம், உடல் நமைச்சல், மதரோகம், திரிகோஷம், உட்குத்தல், விந்து தானாகப் பிரிதல், இருமல், மூச்சுத்திணறல், கோழைகட்டுதல் ஆகியவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடும். வெற்றியையே அள்ளித்தரும் அற்புதத் தமிழ்மூலிகை. அகத்தியரும் வள்ளலாரும் இதை ‘கபநாசினி’ என்று போற்றினர்.

பொன்னாங்கண்ணி:
விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

புளியாரை:பித்தம்_மயக்கம்_தலைச்சுற்றல் மூலவாயு_வயிற்றுப்போக்கு பேதிவாந்தி இவற்றை நமது உடலைத்தீண்ட விடாது எதிர்த்து நிற்கும் ஓர் அற்புதக்கீரை. ரத்தத்தைச் சுத்தி செய்து கொடுக்கும் வல்லமை நிறையவே உண்டு. எனவே சித்தர் பெருமக்கள் ‘காயசித்தி’ ‘பித்தமார்த்தினி’ எனப் பாராட்டினார்கள்.

முருங்கைகீரை:
உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

பசளி:
சிறுநீர்க் கோளாறுகள், மூத்திரக்கடுப்பு, வாந்தி, மூத்திரக்காய்கள் கோளாறு இவற்றைக் களையவல்ல அற்புத மருத்துவ சஞ்சீவி. கால்சியம், பாஸ்பரஸ். சோடியம் குளோரின் வைட்டமின் ஏ.பி.சி.; புரதம் வெஜிடபிள் ஹீமோகுளோபின் அமீன் ஆசிட் போன்ற கணக்கற்ற ஊட்டச்சத்துக்களை ஒருசேர உள்வாங்கிக் கொண்ட கீரைகளில் அரசன். மொத்தத்தில் இது ஒரு தங்க பஸ்பம். முறையாக உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் ‘சிறுநீரகக் கோளாறு’ உங்களைச் சீண்டிப் பார்க்கவே அச்சப்பட்டு வெளியே நின்று தன்னைத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். இது சத்தியம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

காய்கறிகள்:அவரை, முருங்கை, தூதுவளங்காய், அத்திக்காய், முள்ளிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, பேயன், வாழைத்தண்டு, கொத்தவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளைப் பூசணிக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி, தக்காளி வெள்ளரிக்காய் போன்ற காய்களை மூடிய பாத்திரத்தில் மிதமாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மேற்கண்ட காய்கறிகள் சிலவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளில்தான் நார்ப்பொருள்கள் அதிகமாக உள்ளன. வெள்ளரிக்காய் கோடைக் காலத்திற்கு உகந்தது. நமது வயிற்றில் உண்டாகின்ற புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வெள்ளரி தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கிறது.

காரத்தன்மையால் உடலில் உண்டாகின்ற, புளிப்புத் தன்மையால் உண்டாகின்ற அசுத்தப் பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த உயிர் அணுக்களை உற்பத்தி செய்கின்ற உந்து சக்தி உள்ளது. ரத்த உயிரணுக்களின் சேர்க்கையில் மிக அதிகமாகஉள்ள உப்புப்பொருளான பொட்டாசியம் குளோரைடு பொட்டாசியம் பாஸ்பேட் அதிகமாக உள்ள ஓர் அற்புதமான காய் வெள்ளரிக்காய்.

நாம் உட்கொள்ளும் Methionine புரதம் உடலில் Homocy Stein என்ற நஞ்சாக மாறுகின்றது. இந்த விஷப் பொருள் உடலின் இருதயத்துடிப்பையும் இருதயத்தையும் பெரிதும் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஹோமோசிஸ்டின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும் சக்திவைட்டமின் ‘‘பி6’’_ல் உள்ளது என அறிவியல் அறிவித்துள்ளது. இத்தகைய சக்தி அதிகமாக உள்ள பேயன் வாழைப்பழம், ரஸ்தாளிப்பழம் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பேரீச்சை இவற்றை உண்பது உத்தமம்.

மாங்காய், கொய்யா, பலாப்பழம் இவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது. பால், பலா, மாம்பழம், மீன், கோழி இவை ஒன்றுக்கொன்று எதிர்மறை சக்திகளை உருவாக்கும் முரண்பாடுகள் கொண்டவை. பேதி வாந்தி சிலநேரங்களில் உயிருக்குக் கூட கேடு வந்து சேரலாம். இவற்றை ஒன்றோடு ஒன்று சேர உதவிடாதீர்கள். எச்சரிக்கைமிக தேவை.

கேரட், பீட்ரூட், டர்னிப், நூக்கல், உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு தவிர்ப்பது நல்லது.

சுண்டக்கடலை, தட்டப்பயிறு, மொச்சைப் பயிறு, இவற்றைச் சிறிதளவாக வாரத்திற்கு ஒருமுறை பகல் பொழுதில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை.

நிலக்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா பருப்பு, சாரப்பருப்பு வகைகளில் கொழுப்புச்சத்து விஞ்சி இருப்பதால் தனியாகச் சாப்பிடக்கூடாது. மாதத்திற்கு இருமுறை ஏதாவது உணவோடு கலந்து சிறிய அளவே உண்ணவேண்டும்.

முளைகட்டின துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, ஜீரகம், வெந்தயம், இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.

பசுவின் தயிர், மோர், நெய் சேர்த்துக்கொள்வதில் தண்ணீர் கலந்த மோர் சிறப்பானது.

கடையிலே விற்கப்படுகின்ற ஊறுகாய்வகைகளை ஒதுக்குங்கள் வீட்டிலேயே காரம் எண்ணெய் அதிகம் சேர்க்காது, உப்பு மிகமிகக் குறைவாகச் சேர்த்து தயாரித்துக் கொள்வது உத்தமம். எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, நெல்லிக்காய், மாஇஞ்சி, பச்சைமிளகு மாவல்லிக்கிழங்கு (நன்னாரி), இவை உங்களது ஊறுகாய்களுக்கு மூலப் பொருளாக இருத்தல் அவசியம்.

உப்பு:நாம் சாப்பிடுகின்ற எல்லா உணவு வகைகளிலேயும் ‘உப்பு’ வஞ்சனை இல்லாமல் நமக்கு சுவையைக் கூட்டிக்கொடுத்து மறைமுகமாக ‘நஞ்சினை’ உடலுக்குள் கூட்டி வருகிறதை நாம் மறந்து விடக்கூடாது. ‘உப்பே தப்பு’ என்பார்கள் தமிழ் மூலிகை மருத்துவர்கள். உப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது கடல் உப்பே. உப்பில் சோடியம் குளோரைடு வெகுவாக உள்ளது. உங்கள் உடலில் ஏதாவது ரத்தக்காயம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் உப்பை வைத்துப்பாருங்கள். தாங்க முடியாத எரிச்சல் இருக்கும். அந்த அளவிற்கு வீரிய சக்தி கொடுக்க வல்லது உப்பு. இந்த மாற்றமே நமது குடலிலேயும் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்ற போது ஏற்படுகின்றது.

ஆனால், இந்த உபாதையை நம்மால் உணர இயல முடியவில்லை. காரணம், நமது நாக்கின் ருசியே அந்த எரிச்சலை அரண் போட்டு உணரவிடாது தடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். நீங்கள் சாப்பிடுகின்ற 1 கிராம் உப்பின் எரிச்சலைப் போக்க 70 கிராம் தண்ணீர் குடித்தால் தான் உப்பின் நஞ்சுத் தன்மையைப் போக்க இயலும் என மேலை நாட்டு மருத்துவக் குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் உடலின் எடை கூடுகிறது. உப்பே இல்லாது உணவை உட்கொள்ளப் பழக்கிக் கொள்வது நல்லது. துவக்கத்திலே உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் உங்கள் உடலின் பகுதிகளில் சிறுநீரகத்தில் தான் உப்பு தேக்கமாகிறது. அதை நாம் குடிக்கின்ற தண்ணீராலேயே அன்றாடம் வெளியேற்றுகின்றோம். உடலில் உப்புச்சத்துக் குறையக் குறைய உங்களது எடையும் சீராகவே இருக்கும்.

கடற்கரைச் சாலைகளில் உள்ள வானுயர்ந்த கற்கோட்டைகள் எல்லாமே அரித்து அரித்து உதிர்வதைப் பார்க்கின்றோம். கற்கோட்டைகளையே அரித்து விடுகின்ற உப்பு உங்களது உடலை விட்டு வைக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மில் பலர் உப்பில்லா உணவு நமது நினைவாற்றலைக் குறைக்கும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். இது தவறு. உப்பு உங்களது சிறுநீரகத்தை இயங்காது தடுத்து விடுவதோடு, மூளை வளர்ச்சியையும் பெரிதும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

ஆங்கில மருத்துவம் இந்த வகையில் நம்மைக் குழம்புகிறது. சில நேரங்களில் உப்பு தேவை என வாதிடுகிறது. இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் சுவடு தெரிந்துவிட்டால் உப்பை நிறுத்துங்கள் என சிவப்புவிளக்கை கையிலே தூக்கிப் பிடிக்கிறது. ஒரு கையிலே பச்சை விளக்கையும் மற்றோர் கையில் சிவப்புக் கொடியையும் பிடித்து நம்மை குழப்புகிறது.

உப்பின் அறிவியல் பெயர் சோடியம் குளோரைடு. மனித உடல் வளர்ச்சிக்கு இரும்பு பொட்டாஷ், கந்தகம், கால்சியம் தேவைதான் உப்பை மனிதனால் ஜீரணிக்க இயலாது. உப்பை உண்பதால் மனிதனது சிறுநீரகம், கல்லீரல், இதயம், இரத்தக் குழாய்கள், மூளை வெகுவாக பாதிக்கப்படுகின்றன என அமெரிக்க மருத்துவர் பால் பேக்கர் தெரிவிக்கின்றார்.

உப்பு சாப்பிடுவதால் நரம்புகளில் எரிச்சலை உண்டாக்குகிறது. நமது உடலில் உள்ள கால்சியத்தைத் திருடி பற்களையும் எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்துவிடுகிறது. நமது குடலில் உள்ள லேசான சவ்வுகளை அரித்து குடற்புண் பிராங்கைடிஸ் போன்ற நோய்களை மிகச் சுலபமாக பதியவைக்கிறது இந்தப் பொல்லாத உப்பு. எனவே இன்றிலிருந்து உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முற்றிலும் அகற்ற முயற்சி செய்யுங்கள்.

சரி உப்பு வேண்டாம். நமது உடலுக்கு உப்புச் சத்து வேண்டாமா? என்று நீங்கள் இதழ் மூடி முணுமுணுப்பது தெரிகிறது. உப்புச் சத்துக்கள் உள்ள இயற்கை உணவுகளை உண்பதில் தவறில்லை. நமக்காகவே நமது சித்தர்களும் மேலைநாட்டு மருத்துவமும் வாய் மொழிந்தவை இதோ!

மூளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, காரட், சௌசௌ, வெண்பூசணி, வெங்காயக்கீரை, முட்டைக்கோஸ் நூல்கோல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, ஆப்பிள், திராட்சை, வெங்காயம், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைத்துவிடுகிறது. உங்கள் நலத்திற்குத் தேவையான உப்பு சத்து இயற்கை உணவிலேயே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சுகமான வாழ்வுக்கே நீங்கள் சொந்தக்காரர் ஆவீர்கள்.

தலைமுடியின் வளர்ச்சி


தலைமுடியின் வளர்ச்சி

 இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

தலைக்குச் சாயம் (Hair Dye)
சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

ஷாம்பூ (Shampoo)
அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறுவடித்தெடுத்தபின் கிடைக்ளகும் கஞ்சிநீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும். சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் லு பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.

வழுக்கை (Baldness)

வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். ஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.

அதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும். பொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.

பிருங்காமல தைலம்

நல்லெண்ணெய் 1 லிட்டர்

கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்

நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்

பசுவின்பால் 4 லிட்டர்

அதிமதுரத்தூள் 60 கிராம்

கரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன்கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.

பேன் (Tics)
சில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.

பொடுகு (Dandruff)
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.

தேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)

பழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.

வயிற்றுவலி

வயிற்றுவலி
 

வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும். கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.
2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்
3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.
4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.
5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவம்
மருந்து_1
நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2
அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

மருந்து _ 3முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயற்றுவலி குணமாகும்.

மருந்து _ 4அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எÊடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

மருந்து _ 5சுத்தமான களிமண்ணை மாவுபோல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 3 மணி நேரம் கழித்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். வெயிலில் வேலை செய்து திரும்பியவர்கள் வயிற்று வலி நீர் இறங்கவில்லை என்று கூறினால் மல்லாந்Êது படுக்கவைத்து வயிறு முழுவதும் விளக்கெண்ணெய் பூசி வைத்தால் வயிற்றுவலி குறையும்.

அதிகமான கவலை, மனஉளச்சல், உணர்ச்சிவேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால் தான் பெரும்பாலும் வயிற்றில் புண்ணுண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றது.

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்.

உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு:


உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு:

இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங் காலத்திலிருந்தே இருந்த வருகிறது. உடலிலுள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒருவழி முறையேஉண்ணாநோன்பு! அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. உண்ணாநோன்பு, யோகப் பயிற்சியிலும் ஒர் அம்சமாகும்.

18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்களான பிவெனியானொவ், ஐ ஸ்ராஸ்கி ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைத் தீர்ப்பதில் பட்டினி சிகிச்சையின் பயன்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றார். வளர்-சிதை மாற்றக் கோளாறுகள் - குறிப்பாக கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு இரத்தவோட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்துவதில் கட்டப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பயன்கள் குறித்து சோவியத் மருத்துவரான, என். நார்பகோன் தமது ஆய்வுக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார். முன்சிறுகுடல் வளைவு, இரப்பை ஆகியவற்றிலுள்ள புண்களை ஆற்றுவதில் அப்படிப்பட்ட உண்ணாவிரதச் சிகிச்சையின் வெற்றிகள் பற்றி ஏ.பாகுலேவ் என்பவர் ஆய்வுகள் நடத்தி வெற்றிகள் கண்டள்ளார்.

இருபது -முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோவியத் ரூசிய நாடுகளில்
உண்ணாநோன்பு மருத்துவம் பல்வேறு மருத்துவ மையங்களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பின்பற்றப் படுகிறது.

மனப்பிளவு நோய்க்கு உண்ணா நோன்பு
சிலவகை மனக்கோளாறுகளுக்கு குறிப்பாக ஆரம்ப நிலையிலுள்ள மனப்பிளவு நோய்க்கு உண்ணாவிரத சிகிச்சைமுறையைப் பின்பற்றலாம் என்பதை ர~;ய மருத்தவர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் எந்தவித நோயும் இல்லாதிருக்கும் போது கூடத் தாங்கள் நோயுற்றிருப்பதாக அச்ச உணர்வினால் துன்புறும் பல நோயாளிகளுக்கும் பல்வேறு பீதியுணர்வினால் தனிமைப்பீதி கூட்ட நெரிசலால் எற்படும் பீதி, இருட்டு, தொற்றுநோய், கூர்மையான பொருள்களைப் பற்றிய பீதி, ஆகியவற்றினால் அவதிப் படுவோருக்கும் இம்மருத்துவமுறை சிறந்த பலன்களை அளித்துள்ளது.

எங்கள் மருத்துவக்கூடத்தில் மட்டுமே நாங்கள் இதுவரை ஏழாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு இம்முறையைக் கடைப் பிடித்திருக்கிறோம். குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்டு வந்த சில நோய்களைக் குணப்படுத்துவதிலும் இந்த முறை சிறந்த வெற்றிகளைத் தந்துள்ளது. எனினும் சீரான மருத்துவ மேற்பார்வையிலேயே இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வகை மருத்துவம் அளிக்கப் படும் நோயாளிகள் மருத்துவ மையத்தில் தனிக் கூடங்களில் வைக்கப் படுகின்றனர். நோயாளிகள் அவர்களது உறவினர்கள் ஆகியோரது ஒப்புதலின் பேரிலேயே இம்முறை கடைப்பிடிக்கப் படுகின்றது.

முதலில் நோயாளிகள் எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுகின்றனர். உண்ணாநோன்பு மருத்துவம் மேற்கொள்வதால் நோயாளிகள் எவ்வகையான பாதிப்பும் எற்படப் போவதில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இம் மருத்துவமுறை தொடங்கப் படுகிறது.

ஒவ்வொரு நோயாளியும் எத்தனை நாட்கள் உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்பது அவரவரது நோய் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப் படுகிறது. அந்தக் காலகட்டம் இருபது முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கலாம் உண்ணாநோன்பை நோயாளிகள் பின்பற்றும் போது அவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.

மருத்துவ முறைஉணவு கிடைக்காமல் கட்டாயத்தின் பேரில் பட்டினி கிடக்கும் போது ஒரு மனிதனுக்கு சாவு தொடரலாம். அதற்கு மாறாக பட்டினி நிலை இங்கு ஒரு மனிதனது நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் இம் மருத்துவ முறை தொடங்கும் போது ஒரு மனிதனின் குடல் மண்டலம் அனைத்தும் முதலில் கழுவப்பட்டு உடலிலுள்ள எல்லா நச்சுப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு குடிப்பதற்கு நிறைய நீரும் காலை வேளையில் நீர் மருத்தவமும் பொதுவான மசாஜ்மருத்துவமும் அளிக்கப் படுகிறது. அவர்கள் பெரும்பாலான நேரத்தை வெட்ட வெளியிலேயே கழிக்கின்றனர்.

பொதுவாக முதல் 3-5 நாட்களில் கட்டுப்படுத்தப் பட்ட தானியங்கு அமைப்புகள் தளர்ந்து பசியுணர்வு மறைந்துவிடுகிறது. உணவின் மணமோ அதைப் பார்ப்பதோ அவர்களைப் பாதிப்பதில்லை. எனினும் உணவு குறித்த இனிய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன அதிலும் நோயாளி அத்தகைய நினைவுகளிலிருந்து விடுபடாதிருந்தால் அவை மேன்மேலும் அவனைப் பாதிக்கவே செய்யும். மருத்துவரும் உளவியல் சிகிச்சையாளரும் இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு உதவுகின்றனர்.

ஆறாவது அல்லது ஏழாவது நாளில் தான் மிக்க கடுமையான அனுபவம் ஏற்படும். அப்பொழுதுதான் உடல் தன்னுள்ளேயுள்ள அற்றல் சேமிப்புகளையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றது. இந்த நெருக்கடியான கட்டமும் குறுகிய கால அளவுக்கே நீடிக்கும். அதன் பின்னர் நோயாளிக்கு அவ்வளவு சிரமம் இருக்காது. அவனது மன உணர்வும் பலமும் அதிகரிக்கும். அவனிடமிருந்த முதன்மை நோய் குறையத் தொடங்குகிறது. உடலின் ஆற்றல் சேமிப்பு அனைத்தும் தீரும்வரை இந்நிலை நீடிக்கும்.
உடல் புனரமைக்கப் படுகிறது.

முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்களில் ஒருவர் இந்த நிலையை அடைகின்றார். இதற்குள்ளாக அந்த நோயாளியின் நாக்கு தூய்மையடைந்து தோலும் ஒருவித இளஞ் சிவப்பு நிறத்தை அடைகிறது. வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கி அவனுக்கு கோரப் பசி உணர்வு மேலிடுகின்றது. இந்தக் கட்டத்தில்தான் அடுத்த மிக முக்கியமான புனரமைப்பு நிகழ்ச்சி தொடங்கப் படுகின்றது.

முதலில் நோயாளிக்கு நீர்த்த பழச்சாறு கொடுக்கப் படுகிறது. பின்னர் படிப்படியாக நீர் சேர்க்காத பழச்சாறும் அதன் பின்னர் கஞ்சி வேகவைத்த காய் கறி சூப் போன்றவை மெல்ல மெல்லக் கொடுக்கப்படுகின்றது.

சாப்பிடத் தொடங்கி முப்பது அல்லது நாற்பதாவது நாளில்தான் அவனுக்கு வழக்கமான முழு உணவு கொடுக்கப் படுகின்றது.

உண்ணாநோன்பு காலத்தில் ஒரு நோயாளி மொத்தத்தில் சராசரி பதினைந்து முதல் இருபது சதவிகித எடையை இழக்கின்றார். ஆனால் மிகவும் பருமனானவர்கள் எடைக் குறைப்பிற்காகவே இந்தச் சிகிச்சை முறையைக் கடைப்படித்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.

முடிவுரைஇந்த முறையில் ஜந்து உயிரியல் அம்சங்கள் உள்ளன. முதலாவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் தற்காப்பு அடங்கல் என்ற நிலைக்கு முழு ஓய்வு கிடைக்கின்றது. இரண்டாவது உடலிலிருந்து நச்சுப்பொருள் நீங்க உடல் தூய்மை செய்யப்படுகின்றது. மூன்றாவது ஒருவிதக் கூர்மையான உள் அடங்கல் ஏற்படுவதானது பின்னர் ஏற்படும் புனரமைவுக்குத் தூண்டுதலாக ஆகின்றது. நான்கவதாக திசுக்கள் தீவிரமாகத் தாமே புதுப்பிக்கப் படுகின்றன. ஜந்தாவதாக உடலின் எல்லா உறுப்பு மண்டலங்களும் குறிப்பாக நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஒரு விதத் தகைவு நிலைக்கு உட்படுத்தப் படுகின்றது. பிற எல்லா உறுப்புகளையும் போன்றே உண்ணாநோன்பு சிகிச்சையின் போது மூளையும் அதிலுள்ள நச்சுப் பொருள்களை இழந்து புத்துயிர் பெறுகின்றது. மேலும் அதற்கு கணிசமான அளவு ஓய்வும்
தரப்படுகின்றது. மூளை ஆற்றலின் பெருமளவைப் பயன்படுத்தக் கூடியது
செரிமான மண்டலமேயாதலால் உணவின்றி இருக்கும்போது அது நல்ல ஓய்வு பெறுவது இயல்பே. இதுதான் உளவியல் கோளாறுகள் சீரடைவதன் அடிப்படை இரத்தநாள இறுக்க நோயாளிகள் நல்ல நினைவாற்றலைப் பெறுவதுடனே உணர்ச்சிப் பாதிப்புகளினின்றும் விடுபடுகின்றனர்.

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான்



நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் 

அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!







மருத்துவர்கள் ...மருத்துவ தினம்






மருத்துவர்கள் ...மருத்துவ தினம் ..?


ஊரை சுற்றி ..உலகத்தை சுற்றி ..இந்த நோய் சீக்கிரம் தீராது ..குணமாகாது ..ஆபரேஷன் தான் நோய்க்கு தீர்வு என்ற பிறகு ...
ஆயுர்வேத மருத்துவரை பார்த்து ...எத்தனை நாளில் சார் குணமாகும் என்று ...நோயாளிகள் தினம் இல்லையா ?

வைத்திருந்த காசை எல்லாம் ..நோயை கண்டுபிடிக்கவே செலவு செய்து விட்டு ...
மீதம் உள்ள பணத்தை எல்லாம்  படிக்காத போலி மருத்துவரிடம் தொலைத்து விட்டு ...
நோயை குணமாக்க ..வாயை கட்ட வேண்டும் என்றால் ...பத்தியமே என்று பதறும் நோயாளிகளுக்கும் ...நோயாளிகள் தினம் இல்லையா ?

  1. சேவை தான் பிரதானம் ...நோயாளி சரியாக எதையும் தியாகம் செய்வோம் என்ற மருத்துவர்களுக்கும் ..
  2. ஸ்கேன் செனடர்களிடமும்,லேப் நிலையங்களிலும்,எந்த புரோக்கர் தரகு வேலை பார்க்காத மருத்துவர்களுக்கும் ...
  3. உயிரை காக்கும் மருந்துகளையும் ,சாதாரண மருந்துகளையும் ...போலி மருந்து கம்பெனியில் கமிஷன் வாங்காத மருத்துவர்களுக்கும் ..
  4. தேவை இல்லாத எந்த ஆபரேஷனையும் ..எந்த மருத்துவத்தையும்  பார்க்காத மருத்துவர்களுக்கும் ..
  5. காசு கொடுத்து படித்தாலும் ...உயிருக்கு விலை பேசாத ..மனசாட்சியை அடகு வைக்காத மருத்துவர்களுக்கும் ...
  6. தேவை இல்லாத பக்க விளைவுகள் இல்லாத மருந்தை தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களுக்கும் ...
  7. நேர்மையும் ,கண்ணியமும் ..அன்பும் பாசமும் கொண்ட மருத்துவர்களுக்கும் ..



மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...