Tuesday, 25 July 2017
Saturday, 22 July 2017
தைராய்டு நோய்கள
தைராய்டு நோய்கள்வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான பணிகளை செய்கிறது,கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா;தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள்பிரச்சனைகள்உடல் எடை கூடுதல்/குண்டாகுதல்உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ,உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)அதிகமான,சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு72துடிப்பிற்கும் குறைவு)அதிகமான,வேகமான நாடித்துடிப்பு,இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்புஅதிகமான உடல் சோர்வு,களைப்புகை,கால்,நடுக்கம்,பதட்டம்முறையற்ற மாதவிலக்குமாதவிலக்கு இல்லாதிருத்தல்மிக குறைவான மாதவிலக்குகுறைவானவியர்வைமிக அதிகமானவியர்வைஅதிமான தூக்கம்,சோர்வுதூக்கமின்மைமலச்சிக்கல்அடிக்கடி மலம் கழித்தல்,அதிகமான குடலின் அசைவுத்தன்மைமன அழுத்தம்பய உணர்வு,கோப உணர்ச்சிஅதிகமாக முடி கொட்டுதல்,முடி வறண்டு போதல்,சரும வறட்சிஅதிகமாக முடி கொட்டுதல்அதிகமான குளிர்உணர்தல்அதிகமான உஷ்ணம் உணர்தல்அதிகமான உடல் சதை வலி,சதை பிடிப்பு,சதை இறுக்கம்,வலிகள் அதிகமாக இருத்தல்உடல் சதை பலஹீனம்நினைவாற்றல் குறைதல்,பாலுணர்ச்சி குறைதல்இரத்தத்தில்TSHஅளவு அதிகமாயிருத்தல்இரத்தத்தில்T3அளவு அதிகமாயிருத்தல்மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல்,ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல்,சிறுநீரகக் கற்கள்,பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.தைராய்டு நோய் உள்ளவர்கள்6மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்தபரிசோதனைசெய்ய வேண்டும். முறையாக,தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ,சித்த ஆயுர்வேதா,ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம்,ஹம்ஸபாதி கசாயம்,பிருஹத்கட்பாலதி கசாயம்,குக்குலுதிக்க கசாயம்,காஞ்சனார குக்குலு மாத்திரை,ஷட்தர்ணம்மாத்திரை,சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம்,முட்சங்கன்,தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம்,நேட்ரம் மூர்,ஸ்பான்ஜியா,அயோடம்,பிட்யூட்டரினம்,லெசித்தின்,அகோனைட். பல்சேட்டிலா,சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும்,தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும்,வர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.தைராய்டை பற்றிய எனது மற்ற கட்டுரைகள் படிக்க -கீழே இணைப்பை பயன்படுத்தவும
கூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, மாவு சத்து, ஊட்டச்சத்துகள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள்,புரதச்சத்தில் காணப்படுகின்றன.நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் மாவு சத்துகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, மாவு சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெறலாம்.* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.* நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி,குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர்குடிக்க வேண்டும்.
சுவாசத்பயிற்சி
சுவாசத்பயிற்சிஅனைவரும்கட்டாயம்செய்யகூடியபயிற்சியாகும்.இந்தசுவாசத்தியானம்உடலுக்குமிகுந்தபலனளிக்ககூடியதாகும்.ஒருமுழுசுவாசத்தில்வளிமண்டலகாற்றானதுமூக்குவழியாக,உள்ளேவந்துபின்னர்சுவாசப்பைகளைஅடைந்துபின்னர்வெளியேற்றப்படுகிறது.அதுமட்டும்அல்லாமல்உடல்முழுவதும்சக்தியைபரப்பும்.இந்தசுவாசதியானத்தைநாம்கவனமாகஅனுபவித்துசெய்தோமானால்மிகநல்லசெழிமையானவாழ்கையைபெறுவோம்.சுவாச உடற்பயிற்ச்சிக்காண செயல்முறைகள்:1. முதலில் நீங்கள் மிகவும் அமைதியான இடத்தில் ஒரு துணி போட்டு அமர்ந்து கொள்ளவும்.2. உடலை தளர்த்தி உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். அதற்காக விறைப்பாக உட்காரக்கூடாது.3. பிறகு கண்ணை மூடி கொண்டு மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள். பின் மனதுக்குள்ளேநான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்நான் மிகவும் செல்வந்தனாக இருக்கிறேன்நான் வாய் திக்காமல் மற்றவர்களிடம் பேசுகிறேன்நான் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று மனதுக்குள்ளே சொல்லி கொண்டே இருங்கள்4.பிறகுநீங்கள்வாழ்க்கையில்சந்தோசமாகஇருந்தநேரங்களைநினைத்துபாருங்கள்.அதுஉங்களுக்குமகிழ்ச்சியைகொடுக்கும்.நீங்கள்மகிழ்ச்சியாகஇருக்கும்பொதுஅலவற்ற்சக்தியைபெறுவீர்கள்.அனவரையும்ஈர்ப்பீர்கள்.5. இப்போது மறுபடியும் சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதாவது மூச்சை மெல்ல இழுத்து பின் வெளி விடுங்கள்.6. இப்போது சற்றே அதிகமாக நீண்ட மூச்சை இழுத்து பின் மெதுவாக வெளி விண்டுங்கள்.7. மூச்சை இழுத்து விடும்போது நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மற்றுமே இருக்க வேண்டும்.இதே மாதிரி தினமும் 10 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்தால், உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி பெருகும். மன அழுத்தம் குறையும். நீங்கள் எந்நேரமும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களை நோக்கி மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.உங்களின் உடலில் சக்தி அதிகரிக்கும
முடி உதிர்வை தடுக்க எளிய
முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.வழுக்கையில் முடி வளர:கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.இளநரை கருப்பாக:நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.முடி கருப்பாக:ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.தலை முடி கருமை மினுமினுப்பு பெற:அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறியபின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.செம்பட்டை முடி நிறம் மாற:மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம்மாறும்.நரை போக்க:தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.முடி வளர்வதற்கு:கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.சொட்டையான இடத்தில் முடி வளர:நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.புழுவெட்டு மறைய:நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.* முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.* முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.* இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவதுகிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.* கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.
Tuesday, 18 April 2017
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள்
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் மாதவிடாய் சுழற்ச்சி பிரச்சனை முதன்மையானது.
பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
அந்த ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ,
பச்சை காய்கறிகள், கீரைகள் :
கீரைகள், ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் உணவுடன் சேர்த்து கொள்ளவது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.
எள்
சீரான மாதவிடாய் சுழற்சியை பெற எள் சாப்பிடலாம். எள்ளை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
சோம்பு
சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.
மீன் அல்லது மீன் எண்ணெய்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.
பாதாம் பருப்பு
பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.
மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?
மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும் மன அளவிலும் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசௌகரியங்கள் மறைந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நடைபெறும்போது பல பெண்களேகூட அதை உணர்வதில்லை. இவை சுமார் 70 சதவீதப் பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாதாமாதம் நடைபெறும் இந்த மாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்கச் செய்துவிடும்!
இந்த அசௌகரியங்கள் ஏன் ஏற்படுகின்றன?
இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் இந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் நடத்தை சார்ந்த காரணங்களும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக அமையலாம்!
மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்!
வயிறு உப்புசம், பசியின் அளவில் மாற்றம், மார்பகங்களில் வலி அல்லது கனமாகத் தோன்றுவது, உடல் மற்றும் மனச் சோர்வு, தலைவலி, மூட்டு மற்றும் தசைகளில் வலி, முதுகு வலி, உடலில் நீர் கோர்த்துக்கொள்வது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, குறிப்பிட்ட உணவுகளுக்காக ஏங்குவது, பதற்றம், அடிக்கடி மனநிலை மாறுவது, தூக்கமின்மை ஆகியன!
இந்த அறிகுறிகள் மாதத்துக்கு மாதம் வித்தியாசப்படலாம்!
பெண்கள் அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்வது, குடும்பத்தார் மற்றும் அடுத்தவருடன் சண்டை போடுவது போன்றவை இந்த நேரங்களில்தான் அதிகம் நிகழ்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுவதால் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பதே இதற்குக் காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நேரங்களில் உடலையும் மனதையும் நன்கு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்!
சிகிச்சை முறைகள்!
உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாறுதல்களைத் தொடர்ந்து குறித்துக்கொண்டு வந்தால், எந்த மாதிரிச் சூழ்நிலைகளின்போது அந்த மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்த சூழ்நிலைகளுக்கானக் காரணங்களைத் தடுக்கலாம்.
இந்த நேரங்களில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறைத்துச் சாப்பிடவும்.
காபி தவிர்ப்பது நல்லது.
அதிக நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும்.
திடீர் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது.
உடலிலும் மனதிலும் ஏற்படும் இந்த மாறுதல்கள் மிகவும் பாதிப்பாக இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகவும்.
யோகா எப்படி உதவுகிறது?
யோகா நமது நரம்பு மண்டலத்தை தளர்வான நிலையில் இருக்கச் செய்கிறது. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது குறைகிறது.
யோகா நமது ஹார்மோன்களின் அளவுகளைச் சமநிலைப்படுத்துகிறது.
யோகாவின் மூலம் நமது உடலையும் மனதையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடிகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாமல் பதற்றமாக நாம் செய்யும் பல செயல்களைத் தடுக்க முடிகிறது.
யோகாசனங்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தைச் சீர்செய்கிறது.
வளர்சிதை மாற்றம் சீராவதால் குறிப்பிட்ட உணவுக்கான ஏங்குதல்கள் குறைகின்றன.
ஆண்களும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் குடும்ப உறவுகள் மேம்படும்!
Saturday, 7 January 2017
கூந்தல் உதிர்வ
1. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்2. அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம்
கூந்தல் பளபளக்க
கூந்தல் பளபளக்க1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில்விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில்உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல்பளபளப்பாகும்.
‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?
சில நேரங்களில் உங்களுக்கு எளிதில் கோபம், எரிச்சல், அழுகை, உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதா? அல்லது உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா?ஆம் என்றால், உங்களுக்கு மாதவிடாய் வர இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று கணக்குப் போடுங்கள். ஒரு வேளை 14 முதல் 2 நாட்களாக இருக்கலாம். உடல் மற்றும் மன அளவில்வெளிப்படும் மேற்கண்ட அறிகுறிகளைத்தான் ‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ (pre menstrual syndrome) என்கிறோம்.‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும் மன அளவிலும் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசௌகரியங்கள் மறைந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நடைபெறும்போது பல பெண்களேகூட அதைஉணர்வதில்லை. இவை சுமார் 70 சதவீதப் பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாதாமாதம் நடைபெறும் இந்தமாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்கச்செய்துவிடும்!இந்த அசௌகரியங்கள் ஏன் ஏற்படுகின்றன?இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் இந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் நடத்தை சார்ந்த காரணங்களும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக அமையலாம்!மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்!வயிறு உப்புசம், பசியின் அளவில் மாற்றம், மார்பகங்களில் வலி அல்லது கனமாகத் தோன்றுவது, உடல் மற்றும் மனச் சோர்வு, தலைவலி,மூட்டு மற்றும் தசைகளில் வலி, முதுகு வலி, உடலில் நீர் கோர்த்துக்கொள்வது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, குறிப்பிட்ட உணவுகளுக்காக ஏங்குவது, பதற்றம், அடிக்கடி மனநிலை மாறுவது, தூக்கமின்மை ஆகியன!இந்த அறிகுறிகள் மாதத்துக்கு மாதம் வித்தியாசப்படலாம்!பெண்கள் அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்வது, குடும்பத்தார் மற்றும் அடுத்தவருடன் சண்டை போடுவது போன்றவை இந்த நேரங்களில்தான் அதிகம்நிகழ்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுவதால் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பதே இதற்குக் காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நேரங்களில் உடலையும் மனதையும் நன்கு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்!சிகிச்சை முறைகள்!*.உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாறுதல்களைத் தொடர்ந்து குறித்துக்கொண்டு வந்தால், எந்த மாதிரிச் சூழ்நிலைகளின்போது அந்த மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்த சூழ்நிலைகளுக்கானக் காரணங்களைத் தடுக்கலாம்.*.இந்த நேரங்களில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறைத்துச் சாப்பிடவும்.*.காபி தவிர்ப்பது நல்லது.*.அதிக நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும்.*.திடீர் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.*.உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது.*.உடலிலும் மனதிலும் ஏற்படும் இந்த மாறுதல்கள் மிகவும் பாதிப்பாக இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகவும்.யோகா எப்படி உதவுகிறது?*.யோகா நமது நரம்பு மண்டலத்தை தளர்வான நிலையில் இருக்கச் செய்கிறது. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது குறைகிறது.*.யோகா நமது ஹார்மோன்களின் அளவுகளைச்சமநிலைப்படுத்துகிறது.*.யோகாவின் மூலம் நமது உடலையும் மனதையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடிகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாமல் பதற்றமாக நாம் செய்யும் பல செயல்களைத் தடுக்க முடிகிறது.*.யோகாசனங்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தைச் சீர்செய்கிறது.*.வளர்சிதை மாற்றம் சீராவதால் குறிப்பிட்ட உணவுக்கான ஏங்குதல்கள் குறைகின்றன.ஆண்களும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் குடும்ப உறவுகள் மேம்படும்!
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...

-
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகள்:- குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகை...
-
முடி வளர -முடி கருக்க - அணு தைலம் ( ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி) தேவையான மருந்துகளும் செய்முறையும்: ...
-
தைராய்ட் நோயை குணப்படுத்தும் - காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU) ( சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட) தேவையான மருந்துகளும் செய்ம...