Showing posts with label உருளைக்கிழங்கு. Show all posts
Showing posts with label உருளைக்கிழங்கு. Show all posts

Saturday, 12 October 2013

உருளைக்கிழங்கு



உருளைக்கிழங்கு
புனைப்பெயர்
ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்
பணி
பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும். வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.
உபரி பணி
பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.
பிறப்பு
18-ம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார். அதன் பின்னர் பதினாறாம் லூயி காய்கறிபோல சமைக்கலாம் என தனது ராஜசபையில் உத்தரவிட்டான். அதன் பின்னர் உலகம் முழுதும் பரவலானது.
எதிர்ப்பு
ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து பாதிரியார்கள் உருளைகிழங்கு உண்ணும் பொருளல்ல என்றார்கள். இதற்கு இவர் கள் சொன்ன காரணம்பைபிளில் உருளைப்பற்றிய செய்தி வரவில்லை என்பதுதான்.
பயன்
உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போதுகுறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.
ஆலோசனை
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...