Showing posts with label புண் ஆற. Show all posts
Showing posts with label புண் ஆற. Show all posts

Saturday, 30 November 2013

புண் ஆற



மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் -
தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam
(ref-வைத்யகஸப்தஸிந்து - ரஸகற்பூரவிதி)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸகற்பூரம் ஷோதித ரஸகற்பூர     10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக             10          
இவைகளைத் தனியே பொடித்துப் பிறகு இரண்டையும் சேர்த்தரைத்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த

1.            சந்தனம் சந்தன          10 கிராம்
2.            இலவங்கம் லவங்க       10          
இவைகளைச் சேர்த்து அவற்றை 

1.            வேப்பம்பட்டைக் கஷாயம் நிம்பத்வக் கஷாய
2.            புங்கம்வேர்க் கஷாயம் கரஞ்ஜத்வக் கஷாய
3.            கீழாநெல்லிச்சாறு பூஆமலகீ ஸ்வரஸ
4.            முருக்கன் பட்டை கஷாயம் பலாசத்வக் கஷாய
இவற்றால் அரைத்து அத்துடன் மேலே கூறிய சாறுகளில் ஏதாவதொன்று விட்டுத் தனியே அரைத்தெடுத்து குங்குமப்பூ (குங்கும) 10 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு அறைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் கஸ்தூரி (கஸ்தூரி) 2.500 கிராம் சேர்த்தரைத்து 50 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும் அனுபானமும்:      
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை ஒன்று முதல் மூன்று வேளைகள் தேன், பால் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: 
 பரங்கிப் புண்ணின் (பிரங்கரோக உபதம்ஸ), பலவித நிலைகள், நாட்பட்ட பலவித தோல் நோய்கள் (புராணத்வக் ரோக), குதிகால் வாதம் (வாத ரக்த), கீல்வாயு (சந்திகாதவாத) போன்ற வாத நோய்கள் (வாத ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பால் வினை நோய்களிலும் -இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  2. நாள்பட்ட ஆறாத புண்களிலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. மறைவிடங்களில் வரும் புண்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்

=

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...