முதுகெலும்பில்
அறுவைச் சிகிச்சை செய்தபின் வழக்கமான பணிகளில் ஈடுபட எவ்வளவு காலமாகும்?
மைக்ரோ சர்ஜரி செய்து கொண்டவர்கள்
5 ஆம் நாளிலேயே நடக்கலாம், இருப்பினும் 10 நாள் ஓய்வுக்குப் பின் இயல்பான வாழ்க்கை
முறையைத் தொடங்கலாம். ஆனாலும் 3 மாத காலத்திற்கு கடினமான வேலைகளை செய்வதை தவிர்த்தால்
அறுவை சிகிச்சை முழு பலனை தரும் எனலாம்.
வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கு
சிகிச்சையை உடனடி யாக தொடங்க என்னென்ன சோதனை முடிவுகள் தேவை? என்ன வேலை செய்கிறார்?
எவ்வளவு காலமாக செய்கிறார். இடுப்பு வலிகள் எவ்வளவு காலமாக இருக்கிறது. உடலை இயக்கும்
போதோ, கை, கால்களை நீட்டி மடக்கும் போதோ மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வுகள் இருந்தால்,
அது தொடர்பான செய்திகள், எக்ஸ்றே மற்றும் Mகீஐ ஸ்கேன் இவற்றின் முடிவுகளை தெளிவாக தெரிந்து
கொண்ட பிறகு தான் சிகிச்சையைத் தொடங்கு வோம்.
எலும்பில் பிரச்சினைகள்
ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?
புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இவை யிரண்டும் முதுகு
வலியினை (Back pain) அதிகரிக்கும் முக்கிய காரணிகள். சிகரெட் குடிப்பவரைக் காட்டிலும்,
பீடி பிடிக்கும் வழக்கம் உள்ள வர்களை, TAO (டிராம்போ ஆண்சைனா டிரான்ஸ்) செல்கள் இரத்தத்தில்
பல்கிப் பெருகி, அடைப்பினை ஏற்படுத்து கின்றன. இதனால் கல்களில்
குடைச்சல்கள் உருவாகின்றன.
பெண்களுக்கு கல்சியத்தின் அன்றாடத் தேவை
1 கிராம் என்றால் மெனோபாஸுக்கு பின்னர் தேல்யான கல்சியத்தின் அளவு 3 கிராமாக அதிகரிக்கிறது.
அதாவது கல் சியத்தின் தேவை 3 மடங்கு அதிகரிக் கிறது. பெண்களைப் பொறுத்தவரை, வேலை செய்
யும்போது முதுகுப்பிடிப்பு ஏற்படுவ தாலும், மெனோபாஸுக்கு பின்னர் வரும் கல்சியப் பற்றாக்குறை
காரண மாகவும் முதுகுவலி மற்றும் ஆஸ்டியோ பெரேசிஸ் (எலும்புக் கரைவு) ஆகியவை ஏற்படுகி
ன்றன.
எலும்பியல் மருத்துவத்தில்
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?
விபத்திலோ அல்லது வேறு எந்த வகை யிலோ
கை, கால்கள் முழுவதுமாகச் துண்டிக் கப்பட்டு விட்டாலும், அதனை புதிதாகப் பொருத்துமளவிற்கு
எலும்பியல் மருத்துவத் துறை தற்போது வளர்ந்துள்ளது. இதற்கு "ரிஇம்பிளான்ட்டேஷன்' என்று பெயரிடப்பட்டுள்ள பிளாஸ்டிக்
சர்ஜரி முறையாகும்.
துண்டிக்கப்பட்ட உறுப்புகளை
மீண்டும் பொருத்த முடியும். துண்டிக்கப்பட்ட
உடல் உறுப்புகளைப் பாதுகாக்க, அருகிலுள்ள ஓடும் தூய நீரிலோ அல்லது தூய நீரிலோ அவற்றைக்
கழுவி, பிளாஸ்டிக் பையால் சுற்றி, அதனை ஐஸ் கட்டியில் வைத்து, பாதுகாப்பாக எடுத்து
வந்தால் (நேரடியாக உறுப் புகளை ஐஸிலோ, ஐஸ் நீரிலோ வைக்கக் கூடாது) அதனை மீண்டும் பொருத்திவிடலாம்.
எலும்பு முறிந்து, புண் ணாகிவிட்ட நிலையிலும், அதனை மறுசீரமைப்பு செய்யும் சிகிச்சை
முறை தற்போது பெருமளவில் பயன் பாட்டிலுள்ளது.
போலியோ வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஏதேனும் சிகிச்சை முறைகள் உண்டா?
உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நன்றாக
இயங்கும் காலில், எடையை முழுவதும் செலுத்தி நடப்பதால் 35 ஆண்டுகளில் எலும்புகள் தேய்மானமாகி
விடும் வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க கால்களில் காலிப்பர்களைப் பொருத்தி, இயல்பான
காலினைப் போன்று நடக்க வைக்க முடியும். இதனை முன்னாள் இந்திய குடியரசு தலைவரான அப்துல்கலாம்
தலைமை யிலான அறிவியல் குழு 1992 ஆம் ஆண்டில் இதற்குரிய காலிப்பர்களை வடிவமைத்தது. இதனையே
பெரும்பான் மையான மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
குதிகால் வாதம்
என்றால் என்ன? அதனை குணப்படுத்த இயலுமா?
குதிகால் எலும்புக்கும் விரல்களுக்கும்
இடையே "அப்போ நீயூரோசிஸ்' என்ற இணைப்பு இயல்பாக உள்ளது. முதுமை யின் காரணமாக இந்த
இணைப்பில் சுருக்கம் உருவாகும் போது குதிகால் வாதம் ஏற்படுகின்றது. காலையில் தூங்கி
எழுந்த வுடன், அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். 34 அடிகள் எடுத்து
வைத்து நடக்கும் போது இதனால் ஏற்படும் சிரமத்தை உணரலாம்., பின்னர் இயல்பாக நடக்கத்
தொடங்கிவிடுவார்கள். இதனைத்தான் மருத்துவ துறை குதி கால் வாதம் என்று குறிப்பிடுகின்றது.
இந்த குதிகால் வாதமானது ஒரு மூட்டிலிருந்து அடுத்த மூட்டிற்குப் பரவாது.
இதனை குணப்படுத்த, சரியான முறையில் உணவுப்
பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். MCR எனப்படும் மைக்ரோ செல்லுலார் ராப்பர், MCP எனப்படும்
மைக்ரோ செல்லுலர் பாலிமர் ஆகியவற்றால் ஆன செருப்புகளை அணிவதன் மூலமும், இப்பிரச்சினைக்கு
தீர்வு காணலாம். மணல் மற்றும் கடற்கரை மணலில் காலணி அணியாமல் நடப்பதும், மருந்து, மாத்திரைகள்
மற்றும் பிசியோதெரபி செய்து கொள்வதன் மூலமும் இதனைக் குணப்படுத்தலாம். எந்த நிலையில்
இருந்தாலும் இதனை பூரணமாக குணப்படுத்த இயலும்.