Showing posts with label எயிட்ஸ். Show all posts
Showing posts with label எயிட்ஸ். Show all posts

Saturday, 1 March 2014

எயிட்ஸ்

 எயிட்ஸ்
 
எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.அவ்வாறான சந்தேகங்களை களைவதற்கே இந்த விளக்கம்.

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் சில திரவங்களின் நேரடித் தொடர்பினால் மட்டுமே தொற்றும். அதுதவீர சுவாசத்தின் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை.

அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்

உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடுபடும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை 
என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி ,குதவழி என எந்தவிதமான உறவின் போதும் தொற்றலாம்.
கொண்டம்(ஆணுறை) பாவிப்பது இவ்வாறு நோய் தொற்றுவதைத் குறைக்கும். எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாதுகாப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது எயிட்ஸ் ஏற்படாது.

அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம் நோயற்றவர்களின் இரத்தத்தோடு தொடர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் எயிட்ஸ் தொற்றலாம்.இந்த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம்.

இதைத் தடுப்பதற்கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற்றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக்கென தனியாக புது பிளேட் 
பயன் படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இது தவீர நோயாளியின் குருதி தவறுதலாக நோய் இல்லாதவருக்கு வழங்கப்பட்டாலும் எயிட்ஸ் தொற்றலாம்.

மேலும் நோயுள்ள ஒரு தாய் ,நோய் இல்லாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் எயிட்ஸ் தொற்றலாம்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...