Showing posts with label பசியின்மையால் வருகிற நோய். Show all posts
Showing posts with label பசியின்மையால் வருகிற நோய். Show all posts

Saturday, 7 December 2013

பசியின்மையால் வருகிற நோய்

பசியின்மையால் வருகிற நோய்களுக்கு -அக்னிதுண்டீவடீ -Agni thundi vat
  (ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்யாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

I.        சுத்தி செய்த ரஸம் ஷோதிதரஸ      10 கிராம்
2.      சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10          

இவைகளைச் சேர்த்துக் கஜ்ஜளி செய்து அத்துடன்

1.            ஓமம் அஜமோதா                               10 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10          
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்10          
4.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
5.            கொடிவேலி வேர் சித்ரக                         10          
6.            சீரகம் ஜீரக                                     10          
7.            வாயுவிடங்கம்  -  விடங்க                       10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம், மற்றும் பொடித்த

II.           

 1.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார             10 கிராம்
2.            யவக்ஷாரம் யவக்ஷார                10          
3.            இந்துப்பு ஸைந்தவலவண            10          
4.            கல்லுப்பு ஸ்வர்ச்ச லவண            10          
5.            சோற்றுப்பு ஸமுத்ர லவண                10          
6.            பொரித்த வெங்காரம் டங்கண சூர்ண   10          
தனித்தனியே சிறிது சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சூர்ண ஆகியன மற்றும்

III.            

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி           10 கிராம்
2.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை - ஷோதிதவிஷமுஷ்டி 160    
ஆகியவற்றைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ரஸ) கொண்டு நன்கு அறைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் வரை வெந்நீர், எலுமிச்சம் பழச்சாறு, தேன், இஞ்சிச்சாறு அல்லது ஜீரகக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  


பசியின்மை (அக்னி மாந்தியம்), செரியாமை (அஜீர்ண), ருசியின்மை (அருசி) முதலிய ஜீரணக்கோளாறுகள், பெருங்கழிச்சல் (கிராணி) மற்றும் செரியாமையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் (ஆமஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. ஆமம் என்ற செரியாத நிலையால் வரும் நோய்களுக்கு இந்த மருந்தை கொடுத்து ஆரம்பித்தால் நல்ல பலன் தெரியும் ..
  2. அஜீர்ணத்தால் ஏற்படுகிற கிரகணிக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும் ..
  3. இந்த மருந்தை எனது கிளினிக்கில் கொடுத்து நல்ல பலன் கிடைத்துள்ளது ...நான் ஆமவாததிர்க்கும் இந்த மருந்தை பயன் படுத்துவதுண்டு ..

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...