Showing posts with label மனித உடலின் தலைமைச் செயலகம் மூளையே!. Show all posts
Showing posts with label மனித உடலின் தலைமைச் செயலகம் மூளையே!. Show all posts

Saturday, 1 March 2014

மனித உடலின் தலைமைச் செயலகம் மூளையே!



மனித உடலின் தலைமைச் செயலகம் மூளையே!
உனக்கு மூளை இருக்கா ? என்று அறிவு இல்லாத செயல்களைச் செய்பவர்களைபார்த்து கேட்கின்றோம்.
மூளை செயலிழந்தது, மூளை இறப்பு அதனால் மற்றஉறுப்புகள் தானம் செய்யப்பட்டது என அண்மை காலங்களில் பத்திரிக்கைகளில்பார்க்கின்றோம்.
எனவே மூளை என்ற உறுப்பு, மற்ற உடல் உறுப்புகளின் செயல்இயங்கியல் நிகழ்ச்சிகளிலும், மனம் தொடர்பான அறிவு சார்பான இயக்கங்களிலும்முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர முடியும்.
மேல்நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடுகளை பொறுத்து இரண்டு வகையாக பிரித்துள்ளனர்.
1. உடல் இயக்கம் சார்ந்த மூளை (Anatomical brain)
2. மன இயக்கம் சார்ந்த மூளை (Functional brain)
இது தவிர மூளையானது அதன் அமைப்பை பொறுத்து பல பகுதிகளாகபிரிக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் மிக முக்கிய உறுப்பாக இருப்பதால்மிகவும் பத்திரமாக எளிதில் உடையாத கபால ஓட்டினுள் வைக்கப்பட்டுள்ளது.
இதன் பகுதிகள்
பெருமூளை, சிறுமூளை, பான்ஸ், முகுளம் என பிரிக்கப்படுகிறது.
ஒரு கணிப்பொறி எவ்வாறு பல்லாயிரக்கணக்கான செய்திகளை சேகரித்துபாதுகாக்கின்றதோ, அதுபோல் மூளையும் நாம் பார்த்தது, கேட்டது, உணர்ந்தது,சுவைத்தது, நுகர்ந்தது என ஐந்து முக்கிய உணர்வு உறுப்புகளின் வாயிலாககிடைக்கும் தகவல்களை தனது செல்களில் பதியவைத்துக் கொள்கிறது. தேவையானநேரத்தில் தேவையான இடத்தில் தேவையான செய்திகளை வெளிக்காட்ட உதவுவது மூளை.
மூளையானது பலகோடிக்கணக்கான (சுமார் 800 கோடி) சிறப்புச் செல்களால் தன்னைஉருவமைக்கிறது. அதன் பெயர் நியூரான். இந்த நியூரான்கள்தான் மூளையின்கட்டளைகளை உடல் செல்களுக்கு கடத்துகிறது. மூளையை சிந்திக்க செய்கிறது.உடலில் ஏற்படும் உணர்வுகளை மூளைக்கு செலுத்துகிறது.
பொதுவாக மூளையானது சராசரியாக வளர்ந்த ஆண்களுக்கு 1400 கிராம் எடை உள்ளது.பெண்களுக்கு அதைவிட சற்று குறைவுதான் (1200 கிராம்) ஆனால் மூளையின் எடைக்கும் அறிவுத் திறனுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. மூளையில் உள்ளமடிப்புகள் (கைரி மற்றும் சல்கஸ்) அமைப்பை பொறுத்தே ஒரு உயிரின்அறிவுத்திறன் தீர்மானிக்கப் படுகிறது.
பிரதம மந்திரியான மூளை தன்னுடைய வேலைகளைச் செய்ய தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள பன்னிரெண்டு ஜோடி முக்கிய மந்திரிகளையும் (கிரேனியல்நரம்புகள் எனப்படும் மூளை நரம்புகள்) 31 ஜோடி ராஜாங்க மந்திரிகளையும்(மூளைத் தண்டுவடத்தில் இருந்து கிளம்பும் தண்டுவட நரம்புகள்)நியமித்துள்ளது.
உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல் கல்லீரல், மண்ணீரல், கணையம்,சிறுநீரகம் மற்றும் இரைப்பை ஆகியவற்றை வேகஸ் (ஙச்ஞ்தண்) எனப்படும்பத்தாவது மூளை நரம்பின் மூலமாக நேரடியாக கட்டுப்படுத்துகிறது.
இது தவிர நம்முடைய உணர்வுகளை தூண்டுகின்ற வெளிப்படுத்துகின்ற செயல்களானஒலி, ஒளி, மணம், சுவை முதலியவற்றின் உறுப்புகளான காது, கண், மூக்கு,நாக்கு ஆகியவற்றையும் நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பேச்சு என்பது ஒருவரின்நடத்தை, வளர்ப்பு படிப்பு மற்றும் எண்ணங்களை வெளிப் படுத்துகிறது. எனவேவார்த்தையின் வடிவங்களை வேகங்களை, ஏற்ற இறக்கங்களை ஹைபோ கிளாசல், கிளாளோபெரின்சியல் என்ற முக்கிய அமைச்சர்கள் மூலமாக நேரடிக்கடடுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மூளை.
நமக்கு பிடித்தவற்றைப் பார்க்கும்போது, கேட்கும்போது, சுவைக்கும்போதுமுகத்தில் மகிழ்ச்சி தோன்றுகிறது. பிடிக்காதவற்றை கேட்கும்போது முகம்சுருங்குகிறது. பாம்பு, இருட்டு போன்றவற்றை பார்க்கும்போது பயம்முகத்தில் தெரிகிறது. நமது உணர்வுகளை வெளிக்காட்டும் கண்ணாடி முகம்.முகத்தில் ஏற்படும் அஷ்ட லட்சணம் என்று சொல்லப்படும் எட்டுவிதமானபாவனைகளையும் தேவையான சமயத்தில் காட்ட உதவுவது 8வது முக்கிய மந்திரியானமுக நரம்பு (பேசியல் நர்வ்)
இந்த பன்னிரெண்டு ஜோடி முக்கிய மந்திரி நரம்புகளும் முக்கிய இலாகாபொறுப்புகளுடன் மூளையின் நேரடித் தொடர்பில் இருக்க, குடிமக்களாகிய கை,கால், உடல் இயக்கங்களை கட்டுப்படுத்த 31 ஜோடி மூளைத்தண்டு வட நரம்புகளானஇணை அமைச்சர்களை நியமித்துள்ளது. அவர்கள் நாம் நடக்க, நிற்க, ஓட, கைகால்களை அசைக்கக் கூடிய வேலைகளை செய்கிறார்கள்.
இவை அனைத்தும் நியூரான் மூலமாக தங்கள் வேலைகளைச் செய்துகொண்டு இருக்க,சத்தமில்லாமல் மற்றொரு முக்கிய பணியைச் செய்கிறார் நமது பிரதம மந்திரி.
அது தன்னுடைய வேதியல் சுரப்பிகள் மூலமாக மனம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஆனால் நம்மை முழுவதும் ஆளக்கூடிய மாய மந்திரவாதியை தன் கட்டுப்பாட்டில்வைத்திருப்பதுதான் .
வாழ்க்கையில் அனைவரும் வெற்றி தோல்விகளை சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆனால் தினசரி செய்தித்தாள்களில் பார்க்கும்போது தேர்வில் தோல்வி காதல்தோல்வி, வியாபாரத்தில் தோல்வி அதனால் தற்கொலை செய்து கொண்டனர் என பார்க்கிறோம்.
தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதுதான் முடிவா?
அல்லது தோல்வி அடைந்த அனைவருமே தற்கொலை செய்து கொள்கிறார்களா?
இல்லை. பிறகு ஏன் ஓரு சிலர்மட்டும் இந்த முடிவை தேடிக்கொள்கிறார்கள்?
இதற்கு பதில் மனதிடம் இல்லாதது. அந்த மனதிற்கு திடத்தை தருவது மூளையில்சுரக்கக்கூடிய டோபமைன், செரடோனின் மற்றும் அசிடைல் கொலின் போன்றவேதிப்பொருட்களே.
மூளையின் இயக்கச் செயல்களை இந்த வேதிப்பொருட்கள் கட்டுப்படுத்துகின்றது.இதில் குறைபாடு ஏற்படும்போதே மனச்சோர்வு முதல் மனச்சிதைவு வரையிலான மனநோய்கள் ஏற்படுகின்றது. எண்ணச் சிதறல்கள், ஆளுமைக் கோளாறுகள், நடைமுறைகோளாறுகள் முதலியவையும் இதனாலேயே ஏற்படுகிறது.
நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மற்றும் மனதின் முழுத் திறனையும்கட்டுப்பாட்டில் வைத்து, ஒரு மனிதனை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும் மூளை மனிதனின் தலைமைச் செயலகம் மட்டுமல்ல.. அவனின் ஆணிவேரும்கூட!

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...