எலும்புத் தொடர்பாக இளவயதினரை
அதிகமாக பாதிக்கும் பிரச்சினை எது?
மூட்டுகளுக்கு இடையே நிகழும்
உராய்வினைத் தடுக்க ஒருவகையான திரவம் இயல்பிலேயே நமது உடலில் இருக்கிறது. இதன் அடர்த்தி
குறைந்து வருவது தான், எலும்பு தேய்மானத்தின் முதல் நிலை. (அதாவது எண்ணெய் போல் இருக்க
வேண்டிய திரவம், அடர்த்தி குறைந்து தண்ணீர் போல் ஆகிவிடுவது). இது தான் இன்றைய இளைய தலை முறையினரை பெருமளவில் பாதிக்கிறது.
அதிலும் குறிப்பாக, 35-40 வயதுள்ளவர்களைப்
பெரும்பாலும் பாதிக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய "ஜெல்' போன்ற ஊசிகள், மூட்டுகளில்
செலுத்தப்படுகின்றன. இது உராய்வைக் குறைக்கும் திரவத்தின் அடர்த்தியைக் அதிகரிக்கிறது.
இக்குறைகளைச் சீர்செய்ய தொடர்ச்சியாகப் போடப்படும் ஊசிகளும் தற்போது உள்ளன. இது போன்ற
சிகிச்சைகள் பலனளிக்காமல், தேய்மானம் மிகவும் முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே மூட்டினை
மாற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப் பரிந்துரைக் கபடுகிறது.
மூட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து
கொண்டால் வலி இருக்காது. ஆனால் இயல் பாக எந்த அளவுக்கு
(90 120 டிகிரி) மூட்டினை இயக்கும் இயல்பு உள்ளதோ, அதே அளவில் மூட்டு மாற்று அறுவைசிகிச்
சைசெய்த பின்னும் இருக்கும் என்று உறுதி யாக கூற இயலாது. அதே தருணத்தில் மாற்று றப்பர்போல்
தண்டு செயல்படும் என நினைப்பது தவறு.