Showing posts with label முடியை கருப்பாக்கும் கறிவேப்பிலை. Show all posts
Showing posts with label முடியை கருப்பாக்கும் கறிவேப்பிலை. Show all posts

Monday, 21 April 2014

முடியை கருப்பாக்கும் கறிவேப்பிலை




முடியை கருப்பாக்கும் கறிவேப்பிலை 
நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில் தான். அதேபோல்…. அதிகமாக உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால், ஆறடி கூந்தல் கூட அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.

* கறிவேப்பிலையைத் துவையலாகவோ பொடியாகவோ உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச்சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிடுவேன் என்று முதலில் ஒரு சபதம் போடுங்கள்!
* வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.
* முடி உதிர்வதை உடனடியாக கவனிக்காமல் விட்டால்… கடைசியில் தினம் தினம் `திருப்பதி’ போனது போல ஆகிவிடும் தலை! நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இது தான் கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.
* இளவயதில் வரும் முடி கொட்டுதல், வழுக்கை, நரை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க… 100 மில்லி தண்ணீரைக்கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு `பேக்’ போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்த ஷாம்பூ அல்லது சீயக்காயினால் அலசுங்கள்.
* வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்கையின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...