மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை அல்லது செங்கண்மாரி எனப்படுவது ஒரு வகை வைரசினால் ஏற்படுகின்றது.இது எமது கல்லீரலைத்(Liver) தாக்கி அதிலே அலர்ச்சியைஏற்படுத்தும் ஒரு நோயாகும்.
இது ஹெப்பட்டைட்டிஸ் A,B,C,D,E என பல்வேறு வகையான வைரசுக்களால் ஏற்படலாம்.
ஒவ்வொரு வைரசின் தாக்கமும் நோய் நிலைமையும் வேறு வேறானவை.
பொதுவாக ஏற்படுகின்ற நோயானது Hepatitis A (ஹெப்பட்டைட்டிஸ் A ) எனப்படும் வைரசினால் ஏற்படுகிறது.
இது உணவின் மூலமே பரவும்.
மாறாக ஹெப்பட்டைட்டிஸ்B வைரஸ் உடலுறவு மூலமும் குருதி பரிமாற்றம் மூலமும் பரவும்.
ஹெப்பட்டைட்டிஸ்A வைரஸ் பொதுவாக சிறுவர்களை அதிகமாகத் தாக்கும் அதேவேளை எல்லா வயதினரையும் இது தாக்கலாம்.
இதன் (Hepatitis A) அறிகுறிகள்
- காய்ச்சல்
- உடம்பு நோ
- வயிற்றின் மேல்ப் பகுதியில் வலி
- வாந்தி
- கண்கள் ,உள்ளங்கை போன்றவை மஞ்சள் நிறமாக மாறுதல்
இந்த நோய் தானாக சுகமாகி விடும்.ஆனாலும் வாந்தி,காய்ச்சல், உடம்பு வலி என்பவற்றை நீக்க சில மாத்திரைகள் தேவைப்படும்.
ஹெப்பட்டைடிஸ் A ஏற்பட்ட ஒருவருக்கு சுகமான பின் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
மேலும் மீண்டும் ஒருமுறை இந்த நோய் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பம் இல்லை.
அதாவது ஹெப்பட்டைடிஸ் A வைரஸ் தாக்கம் வாழ்வில் ஒருமுறைதான் ஏற்படும்.