குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu
(ref- பைஷஜ்ய ரத்னாவளி - மேதோரோகாதிகாரம்)
தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்தீ 10 கிராம்
2. மிளகு – மரீச்ச 10 “
3. திப்பிலி – பிப்பலீ 10 “
4. கொடிவேலிவேர் – சித்ரகமூல 10 “
5. வாயுவிடங்கம் – விடாங்க 10 “
6. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 10 “
7. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 10 “
8. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 “
செய்முறை:
இவைகளை நன்கு பொடித்துச் சலித்து சுத்தி
செய்த குக்குலு (ஷோதித குக்குலு) 90 கிராம்
சேர்த்துக் கல்வத்திலிட்டு திரிபலா கக்ஷாயம் விட்டு துண்ணியதாக அரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கி நிழலில்
உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.
அளவும்
அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு
மாத்திரைகள் வரை தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
உடல் பருமன் (மேதோவ்ருத்தி (அ) ஸ்தூலதா), உடல் துர்நாற்றம் (சரீர தௌர்கந்த்ய), ஆமவாதம் (ஆமவாத), கீல்வாயு (அ) வாதம் (சந்திகாதவாத), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), நாட்பட்ட புண்கள் (புராணவ்ரண), கொப்பளங்கள், கட்டிகள்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- கொடம்புளி சூப்புடன் -இந்த மாத்திரையை காலை மாலை இரண்டு சாப்பிட வெகு வேகமாக எடை குறையும் ..
- வாரனாதி கஷாயம் அல்லது வராதி கஷாயம் + இந்த மாத்திரையும் எடை குறைய பயன்படுத்தலாம் ..
- மேலே சொன்ன அனுபானம் கிடைக்காதவர்கள் ..திரிபலா கஷாயம் அல்லது கொள்ளு கஷாயம் கூட நல்ல பலன் தரும்
- உடல் குண்டானதால் ஏற்படும் கால் வலி ,வாத நீர் போன்றவற்றுக்கும் இந்த மாத்திரை வேலை செய்யும்
- ஆகாரத்தில் கட்டுப்பாடு ,சரியான உடல் பயிற்சியும் அவசியம் செய்யவேண்டும்