எளிதில் ஜீரணமாகும் இட்லி

பொதுவாக 8 மாத குழந்தைகள் தொடங்கி வயது
முதிர்ந்தோர் வரை அனைவருக்குமே ஏற்றது இட்லி. உடல் நலம் குன்றியோ அல்லது
அறுவை சிகிச்சைக்குப் பிறகோ திட உணவைத் தொடங்கும் போது, முதலில் இட்லியை
சாப்பிடச் செய்து, ஜீரணமாகிறதா என டாக்டர்கள் பார்ப்பார்கள்.
இட்லியில் சேரும் உளுந்தானது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதுடன் ஜீரண சக்தியையும் கொடுக்க வல்லது. 60
வயதைத் தாண்டியவர்கள் இரவில் இட்லி அல்லது சிறிதளவு அரிசி சோறுடன்
காய்கறிகளைச் சாப்பிடலாம். அது அவர்களின் ஆரோக்கியமான, ஆழ்ந்த
தூக்கத்திற்கு ஏதுவாகும்.