இன்றைய சூழலில் முதுகு (எலும்பு) வலியால் பாதிக்கப்படாதோர் மிக குறைவு.
இது எதனால் ஏற்படுகிறது? முழுமையாக குணப்படுத்த இயலுமா?
முதுகெலும்பில் ஏற்படும் வலியினை
(Back Pain) இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. முறையற்ற உடலியக்கத்தால்
வரும் பாதிப்பு (மெக்கானிக்)
2. உடலின் தோன்றும் பிற
குறைகளால் வரும் பாதிப்பு (ஆர்கானிக்) முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர்
முறையற்ற உடலியக்கச் செயல் பாட்டினால் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிக சுமை
சுமப்பவர்கள், கணனித் துறைப் பொறியியலாளர்கள் போன்றோர்கள் (நீண்ட நேரம் அமர்வதால்)
இவ்வகைப் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையின்
காரணமாகவும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு சாத்திய கூறு உண்டு. இக்குறைபாட்டினைத்
தவிர்க்க முதுகெலும்புகளை இயக்கும் நீச்சல், ஓட்டப்பயிற்சி (குறைந்த அளவு 20 நிமிடம்)
மிதிவண்டி ஓட்டுதல், ஸ்கிப்பிங் பயிற்சி ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், உட்காருவதற்கும்
படுப்பதற்கும் இடைப்பட்ட நிலையினைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இயற்கையான உடற்குறை காரணமாகத்
தோன்றும் மூட்டுவலியே அறுவைச் சிகிச்சை வரை கொண்டு வருகிறது. இத்தகு பிரச்சினையை சீர்செய்ய
மைக்ரோ ஸ்கோப்பைப் பயன்படுத்திச் செய்யப்படும் மைக்ரோ சர்ஜரி முறை தற்போது நடை முறையில்
உள்ளது. முதுகில் செய்யப் படும் அறுவைச்சிகிச்சை,
முதுகெலும்பில் உள்ள குறைபாடு, கால் போன்ற எலும்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைத்
தவிர்ப்பதற் கேயாகும். முதுகெலும்பிணைப்பில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையில் வலி
தீருமென்று உறுதியாக கூற முடியாது. 23 இணைப்பு எலும்புகளில் ஒரு இணைப்பில் அறுவைச்
சிகிச்சை செய்து சரிசெய்தாலும், மற்ற இணைப்பிலும் பாதிப்பு பரவிடும் வாய்ப்பு களே அதிகம்.
முட்டிகளில் தேய்மானம் ஏற்படுவதைப் போல,
முதுகெலும்பில் தேய்மானம் ஏற்ப டலாம். இதற்கு பிஸியோதெரபி ஊசி மருந் துகள் மூலம் நிவாரணம்
காணலாம். இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் இணையும் மூட்டுகளிலும் கூட தேய்மானப் பிரச்சினை
ஏற்படு வதற்கு வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தூக்கத்தில்
புரண்டு படுக்கும்போதும், உட்காரும் போதும் வலியை உணர்வர். முதுகெலும்பும், இடுப்பெலும்பும்
இணைந்துள்ள காரணத்தால் நடக்கத் தொடங்கும் 45 அடிகளைக்கூட வைக்க முடியாத அளவுக்கு வலியை
உணர்வர். பின்னர் இயல்பாக நடக்க ஆரம்பித்து விடுவர். முதுகு வலியைப் பொறுத்தவரை முழுமையாக
குணம் பெறுவது மருத்துவர்களின் ஆலோச னையை தீவிர கவனத்துடன் பின்பற்று வதன் மூலமே சாத்தியப்படும்.
முதுகெலும்பில்
அறுவைச் சிகிச்சை செய்தபின் வழக்கமான பணிகளில் ஈடுபட எவ்வளவு காலமாகும்?
மைக்ரோ சர்ஜரி செய்து கொண்டவர்கள்
5 ஆம் நாளிலேயே நடக்கலாம், இருப்பினும் 10 நாள் ஓய்வுக்குப் பின் இயல்பான வாழ்க்கை
முறையைத் தொடங்கலாம். ஆனாலும் 3 மாத காலத்திற்கு கடினமான வேலைகளை செய்வதை தவிர்த்தால்
அறுவை சிகிச்சை முழு பலனை தரும் எனலாம்.
வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கு
சிகிச்சையை உடனடி யாக தொடங்க என்னென்ன சோதனை முடிவுகள் தேவை? என்ன வேலை செய்கிறார்?
எவ்வளவு காலமாக செய்கிறார். இடுப்பு வலிகள் எவ்வளவு காலமாக இருக்கிறது. உடலை இயக்கும்
போதோ, கை, கால்களை நீட்டி மடக்கும் போதோ மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வுகள் இருந்தால்,
அது தொடர்பான செய்திகள், எக்ஸ்றே மற்றும் Mகீஐ ஸ்கேன் இவற்றின் முடிவுகளை தெளிவாக தெரிந்து
கொண்ட பிறகு தான் சிகிச்சையைத் தொடங்கு வோம்.