புழுக்களை ஒழிக்கும் வேப்பங்கொழுந்து:
வேப்பங்கொழுந்து பிணி தீர்க்கும் மருந்து. சிறந்த கிருமி நாசினி. வேப்பங்கொழுந்தை சிறிது மஞ்சள் தூளுடன் சேர்த்து அரைத்து நல்ல கெட்டியான விழுதாக்கி விடவும். அரைத்த கொழுந்தை துணிவைத்து மூடிய பாத்திரத்தில் பனி படும்படி ஜன்னல் அல்து வேறு இடத்தில் வைக்கவும். காலையில் எழுந்தவுடன் அருநெல்லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நெல்லிக்கனி அளவு பெரியவர்களும் சாப்பிடலாம். காலையிலேயே அரைத்து உடனேயும் சாப்பிடலாம். எல்லாவித புழுக்களையும் ஒழிக்கும் சிறந்த மருந்து. மாதம் ஒருமுறை சாப்பிடலாம்.காய்ச்சல் என்று குழந்தைகள் படுத்துவிட்டால், அவசியம் காலையில் அரைத்து வேப்பங்கொழுந்தைக் கொடுங்கள். மந்தக் காய்ச்சல், சளிக்காய்ச்சல், அம்மை வரும் முன்னர் வரும் காய்ச்சல், டைபாயிட் காய்ச்சல் எதுவாக இருப்பினும், காய்ச்சலில் படுத்த குழந்தைகளுக்கு மூன்று நாள் காலை அருநெல்லி அளவு வேப்பங்கொழுந்து கொடுத்தால், அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. "விருந்தும் மருந்தும் மூன்று தினம் மட்டுமே" எனவே மூன்று நாட்கள் சாப்பிட்டால் நலம்.