
வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்:-
வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் பலரிடம் இருந்து வரும் பதில் இதுவாக தான் இருக்கும் - "சாப்பிட்ட பின் தெகட்டல் நீங்கி செரிமானம் ஆவதற்கு". ஆனால் அதையும் தாண்டி அதில் பல பலன்கள் அடங்கியுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை :-
வெற்றிலையில் இருந்து வரும் சாற்றில் சிறுநீர்ப் பெருக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் இந்த சாற்றை பாலில் கலந்து குடித்தால், சிறுநீர் கழிவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
அழற்சி :-
கீல்வாதம் மற்றும் விரையழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க வெற்றிலைகள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் வெற்றிலையின் மேல் விளக்கெண்ணெயை தடவி, அதனை கொப்பளங்கள் ஏற்பட்ட இடங்களில் தடவினால், அவைகள் உடைபட்டு சீழ் வடிந்து ஆறிவிடும். சில மணிநேரங்களுக்கு ஒரு முறை இலைகளை மாற்றியாக வேண்டும்.
கீழ் முதுகு வலி :-
வெற்றிலை அல்லது அந்த இலைகளின் சாற்றை தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்யோடு கலந்து, இடுப்பில் ஒத்தடம் கொடுத்தால், கீழ் முதுகு வலிக்கு நல்ல பலனை அளிக்கும்.
மார்பக பால் சுரப்பதில் உதவும் :-
வெற்றிலைகளை எண்ணெயில் நனைத்து, அதனை மார்பகங்களில் தடவினால், பால் சுரக்க உதவும். அதனால் பால் சுரப்பது அதிகரிக்க இதனை பயன்படுத்தலாம்.
சுவாச கோளாறுகள் :-
இருமல் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தால், வெற்றிலையை கொண்டு அவைகளை சரிசெய்யலாம். அதற்கு வெற்றிலையை கடுகு எண்ணெயில் நனைத்து, அதனை நெஞ்சில் தடவுங்கள். இல்லையெனில் நசுக்கிய வெற்றிலை பழங்கள் அல்லது பெர்ரி பழங்களை தேனுடன் கலந்து குடித்தால், இருமலுக்கு நிவாரணியாக விளங்கும்.
நரம்பு தளர்ச்சி :-
வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், நரம்பு பிரச்சனைகள், தளர்ச்சி, ஆற்றலிழப்பு போன்றவைகளுக்கு அவை மருந்தாக விளங்கும்.
தலைவலி :-
வெற்றிலையில் வலி நீக்கும் குணமும், குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் உள்ளதால், அவைகளை தலையில் வைத்துக் கொண்டால், எவ்வளவு தலை வலி வந்தாலும், அவை பறந்தோடிவிடும்.
புண்கள் :-
வெற்றிலைகளை சாறெடுத்து, அதனை புண்ணின் மீது தடவி, பின் வெற்றிலையை கொண்டு கட்டிவிடுங்கள். 2-3 நாட்களில் உங்கள் புண் ஆறிவிடும்