மனச்சோர்வு
DEPRESSION
மனச்சோர்வு என்றால் என்ன?
மனச்சோர்வு என்பது
மனநிலை நோயாகும்.
இந்த நோய்
உள்ளவர்கள் உற்சாகமின்றி ஆழ்ந்த
வருத்தத்துடன் நம்பிக்கை
இழந்து இருப்பார்கள்.
மனச் சோர்வினால்,
ஒருவருடைய உடல், மன நலம், வேலைத் திறன்,
மகிழ்ச்சி போன்றவை
பாதிக்கப்படும்.
மனச் சோர்வின் தாக்கம்:
Ø சோர்வான மனநிலை
Ø காலையில் மிகவும்
மோசமான மனநிலை;
நாள் போகப்போக
மனநிலையில் முன்னேற்றம்.
Ø நாள் நடப்புகளை
அனுபவிக்க முடியாத
தன்மை
Ø பசி மற்றும்
உண்ணும் விதத்தில்
மாற்றம்
Ø எடை குறைதல்
அல்லது அதிகரித்தல்
Ø தூங்கும் முறைகளில்
மாற்றம்
Ø சக்தியின்மையால் வேலைக்குச்
செல்வதிலோ,
பொறுப்புகளை சமாளிப்பதிலோ கஷ்டப்படுவது
Ø குற்ற உணர்ச்சியும் நம்பிக்கையின்மையும் சேர்ந்து,
இந்த வாழ்க்கை
தேவையா என்ற
எண்ணம்
Ø எண்ணம்,
பேச்சு மற்றும்
அசைவுகளில் வேகம்
குறைவது.
Ø தற்கொலை எண்ணங்கள்
Ø தூக்கம் தடைபடுதல்,
அதிகாலையில் எழுதல்,
மறுபடியும் தூக்கம்
வராமல் தவித்தல்
Ø தலைவலி மற்றும்
வயிற்று வலியால்
அவதிப்படுதல்
Ø மன அழுத்தம்
Ø காரணமில்லாமல் அழுகை
Ø கோபம்,
ஆத்திரம்
Ø சக்தியின்மை மற்றும்
களைப்படைதல்
Ø மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை
Ø முடிவு எடுக்க
முடியாமல் தவித்தல்
Ø எதிர்காலத்தை நினைத்து
எதிர்மறையான எண்ணங்கள்.
Ø தனித்துவம் இல்லாதது
Ø தன்னைத்தானே குறை
கூறுவது.
குறைந்த சுய
மதிப்பீடு
Ø மெய்யில்லாத தோல்வி
மனப்பான்மை
Ø பிறர் இருக்கும்போதும் தனிமை
உணர்வு
Ø உடல் உறவில்
ஆர்வமின்மை
மனச்சோர்வுக்கு ஆயுர்வேத சிகிச்சை
தாரா,
சிரோதாரா மூலிகை
கலந்த எண்ணையுடன்
எடுக்கவும்.
சிரோ அப்பயங்கா
(தலை உருவுதல்)
மூலிகை கலந்த
எண்ணையுடன் எடுக்கவும்.
தியானம்,
பிராணாயாமம்,
ஆசனங்கள் போன்ற
யோகா பயிற்சி
உபயோகமுள்ள சில ஆயுர்வேத மருந்துகள்
Ø சரஸ்வதா ரிஷ்டம்
Ø கூஷ்மாண்ட லேகியம்
Ø பிரம்மி கிருதம்
Ø கல்யாண கிருதம்
Ø சந்தனாஸவா
மனச்சோர்வுக்கு பயன்படும் சில மூலிகை மருந்துகள்
Ø அஸ்வகந்தா
(Withania somnifera)
Ø சதாவரை
(Asparagus raccmosus)
Ø பிரம்மி
(Bacopa monnari)
Ø வசம்பு
(Acorus calamin)
Ø ஜடாமான்சி
(Nardostachys jatamans)
Ø டகாரா
(Vallariana wallichi)
Ø சந்தனம்
(Santalum album)
Ø யஷ்டிமது
(Glycyrrhiza glabra)
Ø துளசி
(Ocinum santom)
செய்யக் கூடியதும் செய்யக்கூடாததும்.
செய்ய வேண்டியவை:
Ø நெல்லிக்காய்
(Phillanthus emblica) ததிமா
(மாதுளம்பழம்)
& அந்தந்த பருவத்தில் விளையும்
பழங்கள்
Ø எளிமையான உணவு
முக்கியமாக இரவுச்
சாப்பாடு
Ø முழுமையான பருப்பு
வகைகள்,
முழுமையான பழங்கள்
Ø வாடாத காய்கறிகள்
Ø தியானம்
Ø பிராணாயாமம்
Ø சமூக சேவை
செய்யக்கூடாதது
Ø அசைவ உணவு
Ø அடிக்கடி சாப்பிடுவது.
அதிக கலோரி
கொண்ட உணவு
Ø அதிகமாக சிந்திப்பது
Ø டின்களில் அடைக்கப்பட்ட உணவு
No comments:
Post a Comment