Saturday, 12 October 2013

அகத்திக்கீரை



அகத்திக்கீரை
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

தீபாவளி ஸ்பெஷல்: எண்ணெய்க் குளியல்



தீபாவளி ஸ்பெஷல்: எண்ணெய்க் குளியல்
தீபாவளி வந்துட்டாலே எண்ணெய்க் குளியல்தான் முதலில்... தீவளிக்குத் தீவளி எண்ண தேச்சு நீ குளி..னு ஒரு பாட்டுகூட வரும்...அதாவது வருடத்தில் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதை அப்படி சொல்றாங்க. ஆனா வாரத்தில் ஒரு முறை எண்ணெய்க் குளியல் மிக மிக அவசியமான ஒன்று. அதனாலதான் 'சனி நீராடுனு' சொல்லிருக்காங்க.
* நம்ம உடலில் இருக்குற வியர்வைத் துவாரங்கள் வழியாத்தான் வியர்வை வெளியேறும்னு எல்லாருக்குமே தெரியும். எண்ணெய் தேய்க்கும்போது வியர்வைத் துவாரங்கள் வழியா எண்ணெய் உள்ளே போய் நம்ம தோலை மிருதுவாக்கறதோடல்லாம தோலின் அடியில் உள்ள அழுக்குகளையும் வெளியே கொண்டு வருகிறது.
* நல்லா அரை மணிநேரம் தேய்ச்சு, கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்கு ரெண்டு ரெண்டு சொட்டு எண்ணெய் விட்டு, கை, கால், முதுகு, இடுப்பு எல்லாம் நல்லா தேய்ச்சு ஊற விட்டு அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணில சீயக்கா தேச்சுக் குளிச்சா.... அடடடா என்னா அருமையா இருக்கும்...
* இப்படி எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறதால உடல் வறட்சி, தலைவலி, உடல் வலி இதெல்லாம்கூட வராது. கண் ஒளி பெறும். உடல் வலிமை பெற்று ஆயுளும் கூடும். நம்ம தோல் மென்மையா, பளபளப்பாகும். சோர்வு, கபம், தூக்கமின்மை எல்லாம் பறந்தோடும்.
* நல்லெண்ணெய் சேராதுன்னு சொல்றவுங்க, அதுல ரெண்டு பூண்டு, ஒரு சின்னத் துண்டு இஞ்சி, நாலு மிளகு, விரலி மஞ்சள்துண்டு எல்லாம் சேர்த்துக் காய்ச்சி ஆற வச்சு வெது வெதுப்பா தேய்க்கலாம். அல்லது தேங்காய் எண்ணெய் தேச்சும் குளிக்கலாம்.
* பெண்கள் செவ்வாய், வெள்ளியும் ஆண்கள் புதன், சனிக்கிழமைகளில் வாரம்தோறும் எண்ணெய்க் குளியல் போடுவது மிகவும் சிறப்பு. பெண்கள் தலைக்குக் குளிச்சிட்டு சாம்பிராணி காட்ட மறந்துடாதீங்க.

Friday, 20 September 2013

ரோஜாவின் மருத்துவ குணம்



ரோஜாவின் மருத்துவ குணம்

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...