Saturday, 7 December 2013

பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும்

பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)
(ref-பஸவராஜீயம் - ஸன்னிபாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           30 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       50           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.           சுத்தி செய்த மனோசிலை (பொடித்தது) ஷோதித மனசில   60 கிராம்
4.            தாமிர பற்பம் தாம்ரபஸ்ம                              40           “
5.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) டங்கண பஸ்ம      70           “
6.            சுத்தி செய்த தாளகம் (பொடித்தது) ஷோதித ஹரிதாளக  90           “
7.            பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) ஹிங்கு           10           “
8.            சுத்தி செய்த நாபி (குறிப்பிட்டுள்ள சாறுகளில் ஒன்று சேர்த்து
அரைத்து விழுதாக்கியது) ஷோதித வத்ஸநாபி         120         “

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

9.            கொடிவேலி வேர் சித்ரக                                90           “
10.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்        100         “
11.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்       100         “
12.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                      100         “
13.          சுக்கு சுந்தீ                                           120         “
14.          மிளகு மரீச்ச                                        120         “
15.          திப்பிலி பிப்பலீ                                      120         “
16.          வசம்பு வச்சா                                        10           “

இவைகளின் சூரணமும் சேர்த்து நன்கு கலங்க அரைத்துப் பின்னர்,

1.            இஞ்சிச்சாறு ஆர்த்ரக ஸ்வரஸ
2.            கொடிவேலிவேர் கஷாயம் சித்ரக கஷாய
3.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ஸ்வரஸ
4.            பூண்டுச்சாறு லசுன ஸ்வரஸ
5.            குந்துமணி வேர் கஷாயம் குஞ்ஜாமூல கஷாய
6.            முருங்கப்பட்டை கஷாயம் சிக்ருத்வக் கஷாய
7.            எருக்கன் வேர் கஷாயம் அர்க்கமூல
8.            கலப்பைக் கிழங்குச் சாறு லாங்லிஸ்வரஸ
9.            சிறு செருப்படைச் சாறு ஹம்ஸபாடீஸ்வரஸ
10.          நொச்சியிலைச் சாறு நிர்க்குண்டீஸ்வரஸ
11.          வெற்றிலைச் சாறு நாகவல்லி பத்ர ஸ்வரஸ
12.          அழிஞ்சில் வேர்ச் சாறு அங்கோலமூல ஸ்வரஸ
13.          முருங்கை வேர்க் கஷாயம் சிக்ருமூல கஷாய
14.          பஞ்சகோல கஷாயம் பஞ்சகோல கஷாய
15.          பெருபஞ்சமூல கஷாயம் மஹாபஞ்சமூல கஷாய

இவைகளைத் தனித்தனியே உபயோகித்து ஒவ்வொன்றைக் கொண்டு மூன்று மணி நேரம் அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

இதை மிகுந்த கண்காணிப்புடன் உபயோகிக்க வேண்டும்

அளவும் அனுபானமும்:     

ஒரு மாத்திரை வீதம் இரு வேளைகளுக்கு இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 
டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் (ஜ்வர), ஜன்னி , இரைப்பிருமல் (தமகச்வாஸ), அமிர்தாரிஷ்ட, தசமூலாரிஷ்ட அல்லது கிராதாரிஷ்டத்துடன் இதனைச் சேர்த்துத் தருவது வழக்கம்.

தெரிந்த கொள்ள வேண்டிவை 
  1. பத்தே நிமிடத்தில் எந்த காய்ச்சலின் வெப்பத்தையும் வெகு வேகமாக குறைக்கும் அற்புத மருந்து 
  2. காய்ச்சல் எந்த நோயினால் வந்திருந்தாலும் இந்த மருந்து அறுபத மருந்து 
  3. சர்வ காய்ச்சல் நிவாராணி இது 

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

(மாதீபல ரஸாயனம்)
                                                                                                    
தேவையான மருந்துகள்:

1.            துருஞ்சிப்பழச் சாறு மாதுலங்க ரஸ   - 500 கிராம்
2.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ரஸ - 500    “
3.            இஞ்சிச் சாறு ஆர்த்ரக ரஸ      - 125    “
4.            இந்துப்பு ஸைந்தவலவண       - 50       “
5.            சர்க்கரை ஸர்க்கர               - 1250  “

செய்முறை:      

சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச்சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.


தீரும் நோய்கள்:  

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. தயாரிப்பது மிக எளிது
  2. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல் ,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க விளைவுகள் இல்லாத மருந்து
  3. கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள் ,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்
  4. எனக்கு தெரிந்த பல ஆங்கில மகப்பேறு மருத்துவர்கள் -தனக்காகவும் ,தன்னுடைய மகள் ,பேத்திகளுக்காகவும் -எங்களிடம் வாங்கி உபயோகித்ததுண்டு ..(ஆனால் அவர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு ஆங்கில மருந்தை தான் வாந்தி நிற்க பயன் படுத்துகிறார்கள் )

ஹோமியோ மருந்துகளும் -உறுப்புகளும் ..

ஹோமியோ மருந்துகளும் -உறுப்புகளும் ..


நரம்புகள்                              : ஜெல்ஸ், K.P.6x, M.P.6x
                                              பெல், சிங்கம், குப் அசிடிகம்

மூளை                                              : ஒபியம்

மூளையை மூடிய தோலில்     : ஹெல்லி, பெல்ல

கண்                                       : யூபரே, ஜெல்ஸ், அகோ, பல்ஸடில்லா

காது                                       : சாமோ, பல்ஸ், பெல்ல

நாக்கு                                      : காஸ்டி, மெர்க்

மூக்கு                                       : ஸீபா, செனகா, அமோனியம்பாஸ் 6x, டூக்ரியம்

வாய்                                      : மெர்க், போரக்ஸ், ஆரம்டிரை, நைட் ஆசிட்

பற்கள்                                     : சாமோ, கிரியா, ரூடா C.F6x

நுரையீரல்                           : கார்போ வெஜி

புளுரஸி                               : அகோ, பிரை

ஹார்ட்                                  : காக்டஸ், ஜெல்ஸ்

உமிழ் நீர் சுரப்பி                 : மெர்க்குறி, மெர்க் ஐயோட்

தொண்டை குரல்வளை  : பெல், பைடோ, ஸ்பாஞ்சி, கார்போவெஜி

பிராங்கைக் குழல்             : முதல் கட்டம் பிரை, 2 வது கட்டம் அகோ

ஹார்ட் இரத்த ஒட்டம்                : அகோ, பெல்ல

வயிறு                                               : நக்ஸ், பிரை, அனகார்டி

பைலோரஸ்                                   : கோனி, ஐயோடி

லிவர்                                     : லைக்கோ, சைனா, செலிடோனி

பித்தப்பை                            : கார்டூஸ்மரி, போடோபில், ஐரிஸ்வர், பிரை

பெரிகார்டியம்                                 : கல் பாஸ்

கிட்னி                                               : லைக், டெரி பிந்தினா, பெப்பரிஸ் வல்க் Q,                                                                               சிலிகா 30


நீர் பிரியாமை, நீர் உற்பத்தி
ஆகாமை                              :ஆக்ஸிடென்ரான்,Qஸபால் ஸெர்லேட்Q ஹைட்ராஸ்டிஸ்ஸோயிடேகோQ

பெருங்குடல் புண்             : பைரோஜி

சிறுகுடல் புண்                               : அர்ச்நைட், காலிபைக்

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...