Saturday, 1 March 2014

சர்க்கரை வியாதி




சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.
அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Sevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.
இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.
இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர்.
மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.
அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.
1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.
1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.
ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.
1988ம் ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.
இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.
அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,
நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.
ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.
ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது என்றார்.

நோய்க் காரணம்: தலைவலி



நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.
1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.
2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும். 
3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.
4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம். 
5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.
6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.
7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்  
8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர். 
9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.
10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.
மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.
1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache)
2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension)
3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation)
4. தசைச் சுருக்கம் (Muscle Spasm)
5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache)
என மருத்துவரகள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.
மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.
மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம்.
தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும்.
எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.
அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,



உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர்.
ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,
ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும்.
ஒரு சிலருக்கு காலையில் வரும்.
ஒரு சிலருக்கு மாலையில் வரும்.
ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு இருபுறமும் வரும்.
ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும்.
ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும்.
ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும்.
ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும்.
ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும்.
ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும்.
ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும்.
ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும்.
வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?
நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள்.
Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர்.
ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன.
ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி என்ன?
மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைத் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும்போது சளியின் தன்மை ஜவ்வசி கஞ்சி போன்று இருக்கும்; ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால்கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.
ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸப்–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?
கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease) என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
பொதுவாக
எந்த அன்னியப் பொருளையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிடும் தன்மை நுரையீரலுக்கு உண்டு. இதனால்தான் தும்மல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறியாக தொடக்கத்தில் நுரையீரல் பாதை லேசாகச் சுருக்கமடைந்து, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். அதிகாலை, இரவில் மூக்கடைப்பு, தும்மல் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு, தும்மலுடன் நெஞ்சை இறுக்கிப் பிடித்ததுபோன்ற உணர்வு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு இவ்வாறு பிரச்சினை இருக்கும்.
நோய் தீவிரமடையும் நிலையில் இரைப்பு (Wheezing) ஏற்படத் தொடங்கும். நோயாளி தன் காதுகளை இரண்டு கைகளால் மூடிக்கொண்டால் இரைப்பின் ஒலியைக் கேட்க முடியும். அது யாழ் ஒலிபோல இருக்கும்.
ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸப்–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?
கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease) என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவில் தலைவலி, கண் எச்சல், கண்ணீல் நீர் வடிதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. எனவே ஆஸ்துமாவையும் சைனுசைட்டீஸ் நோய்களுக்கான அறிகுறிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது எளிது.
ஆஸ்துமாவுக்கு மன அழுத்தத்துக்கும் (Stress) தொடர்பு உண்டா?
தொடர்பு உண்டு. இதை பதினெண் சித்தர்களில் ஒருவரான யூகி சித்தரே குறிப்பிட்டுள்ளார். அதாவது "மா துக்கம்’ (பெரிய துக்கம்) இரைப்பை நோய்க்கு வழி வகுக்கும் என அக் காலத்திலேயே அவர் கூறியுள்ளார். மன அழுத்தம் காரணமாக ஆஸ்துமா அதிகமாகக்கூடும் என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் ஆஸ்துமா நோய்க்கான சித்த மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக நோயாளியின் மன நிலைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஆலோசனை அளிக்கப்படுகிறது.
ஆஸ்துமா காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவிர ஆஸ்துமா நோய் காரணமாக நுரையீரலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். நோயாளியின் உதடு, நாக்கு, நகங்கள் நீல நிறமாக மாறும். மூளை பாதிப்படையக்கூடும். இத்தகைய நிலைக்கு ‘Status Asthmaticus’ என்று பெயர். சில நேரங்களில் மூச்சு அடைப்புடன், வியர்வை, படபடப்பு ஆகியவையும் சேர்ந்து இருந்தால் அது ஆஸ்துமாவாக இல்லாமல் மாரடைப்பாகக்கூட இருக்கலாம். இந் நிலையில் நோயாளியை உடனடியாக அலோபதி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிவில் சேர்ப்பது அவசியம்.
"ஆஸ்துமா அட்டாக்’ நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
நோயாளியை நல்ல காற்றோட்டத்தில் தலையை சற்று தூக்கினாற்போல் படுக்க வைக்க வேண்டும். சுய நினைவுடன் நோயாளி இருந்தால் சிறிதளவு வெந்நீரை குடிக்கச் செய்யலாம்; இது மூச்சுக் குழலை விவடையச் செய்யும். பின்னர் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. பரோட்டா, சப்பாத்தி, பியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடுடன் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) உதவுமா?
நிச்சயம் உதவும். பெங்களூல் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக நாற்காலி சுவாசப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நாற்காலி சுவாசப் பயிற்சி ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து சித்த மருத்துவத்தில் நாற்காலி பிராணாயமப் பயிற்சி பந்துரைக்கப்படுகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் மோர் சாப்பிடக்கூடாதா?
நமது நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் மோரை அறவை தவிர்ப்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோல் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்; வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.
மூச்சுக் குழலை நேரடியாக விவடையச் செய்யவும் (Broncho-dilation) சளியை இளக்கி எளிதாக வெளியேற்றவும் (Mucolytic) மிளகு அல்லது மஞ்சள் உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...