Monday, 21 April 2014

வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு.

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அதற்கேற்ப நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. அப்போது, மூளையில் உள்ள ’ஹைப்போதலாமஸ்’ எனும் பகுதி, வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து, உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது.
இதன் மூலம் உடலின் வெப்பத்தைச் சமன் செய்ய அது முயற்சி செய்கிறது.என்றாலும், அக்னி நட்சத்திர வெயிலின்போது, ’ஹைப்போதலாமஸ்’ தன்னுடைய முயற்சியில் தோற்றுப் போகிறது. அப்போது பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன.
வெப்பத் தளர்ச்சி:
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ’வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.
என்ன முதலுதவி?
· இந்தப் பாதிப்பு உள்ளவரை நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
· தண்ணீரில் நனைத்த துணியால் உடலை மூட வேண்டும். உடலின் வெப்பம் குறையும்வரை உடலை ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
· நிறைய தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.
· ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் உப்பு, 20 கிராம் சர்க்கரை கலந்து அடிக்கடி தரலாம்.
வெப்ப மயக்கம்:
விடுமுறை காலமான கோடையில், சிறுவர், சிறுமிகள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் சிறிது நேரம் விளையாடினால்கூட மயக்கம் வந்துவிடும். அதுபோல், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள் போன்றோர் திடீரென மயக்கம் அடைவதுண்டு.
இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள இரத்த நாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் இரத்தம் தேங்க வழி செய்து விடுகின்றன; இதனால் இதயத்திற்கு இரத்தம் வருவது குறைந்து, இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை; உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.
முதலுதவி என்ன?
· பாதிக்கப்பட்ட நபரைக் குளிர்ச்சியான இடத்துக்கு அப்புறப்படுத்தவும்.
· குளிர்ந்த தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும்.
· தலையைத் தாழ்த்தி, கால்களை ஒரு அடி உயரத்துக்குத் தூக்கி வைத்துப் படுக்க வைக்கவும்.
· ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்றுபடும்படிச் செய்யவும்.
· மின்விசிறி அல்லது கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யவும்.
· மயக்கம் தெளிந்த பின்னர், குடிக்க தண்ணீர், இளநீர், சர்பத், பழச்சாறு ஏதேனும் தரலாம்.
· இது மட்டும் போதாது. அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய நீர் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியதும் வரலாம். ஆகையால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கு வழி செய்வது அவசியம்.
சிறுநீர்க் கடுப்பு:
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகமாகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கியக் காரணங்கள்.
உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள், படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்துவிடும். இதனால் சாதாரணமாக காரத்தன்மையில் இருக்கும் சிறுநீர் அமிலத் தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவால் சிறுநீர்க் கடுப்பு ஏற்படும்.
என்ன செய்யலாம்?
· கோடையில் 3 லிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாகச் சொன்னால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
· எலுமிச்சைச்சாறு, நீர்மோர், இளநீர், ஆரஞ்சு, திராட்சைச் சாறுகள் சாப்பிடவும்.
வியர்க்குருவும் வேனல் கட்டிகளும்
வெயில் ஏற ஏற, வியர்வை அதிகமாகச் சுரக்கும், அப்போது, தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் ’வியர்க்குரு’ வரும். தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே, அந்த இடம் வீங்கி புண்ணாகும். இதுதான் வேனல்கட்டி.
இதற்கு இப்படிச் செய்யுங்கள்!
· வெயில் காலத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளை குளியுங்கள். மதியம் குளித்தாலும் நல்லது.
· தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், துண்டை தண்ணீரில் நனைத்து, அடிக்கடி துடையுங்கள்.
· உடலைத் துடைத்துவிட்டு, வியர்க்குரு பவுடர், காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.
ஒளி ஒவ்வாமை
வெயில் கடுமையாக பாதிக்கும் போது, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக தோலில் புகும். இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. முகத்திலும் உடலின் வெளிப்பக்கங்களிலும் வெப்பப்புண்கள் வரும். அரிப்பு, எரிச்சல், வலி ஏற்படும். இதற்கு ‘ஒளி ஒவ்வாமை’ (Photo allergy) என்று பெயர். இதனைத் தவிர்க்க, வெளியில் செல்லும்போது, ‘சன்ஸ்கிரீன்’ களிம்புகளை முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் தடவிக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புக்கு 10 வழிகள்!
தினமும் குறைந்தது இருமுறை குளிக்க வேண்டும்.
· இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக, சிறுவர்கள் கடுமையான வெயிலில் விளையாடக் கூடாது.
· பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
· வெயில் நேரத்தில் குடை பிடித்துச் செல்லலாம்.
· கண்களுக்குச் சூரியக் கண்ணாடியை (Sun glass) அணிந்து கொள்ளலாம்.
· பருத்தி ஆடைகளை அணியுங்கள். அவற்றில்கூட தளர்வான ஆடைகளை அணியவது முக்கியம்.
· தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
· காபி, தேநீர், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரி பண்டங்கள், காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
· தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடிச் சாப்பிடவும்.
· காலுக்கு ஷூ மற்றும் பிளாஸ்டிக் செருப்புகள் வேண்டாம். மாற்றாக, ரப்பர் அல்லது தோல் செருப்புகளை அணியலாம்.

முகத்தை பளபளப்பாக்கும்.

முகத்தில் ஆலிவ் ஆயிலை நன்கு பரவலாக தடவிக் கொள்ளவும். சீனியை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, விரல்களை ஈரப்படுத்தி சீனியில் தோய்த்து, முகத்தில் வைக்கவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை சீனில் ஈரப்படுத்திய விரல்களைத் தோய்த்து முகம் முழுவதும் சீனி பரவும்படி செய்யவும்.
இது சரும துவாரங்களை நன்கு சுத்தப்படுத்துவதோடு முக வீக்கத்தையும் தணிக்கும். மேலும், சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கும் போது, சருமத்தின் பளபளப்புக் குறையாமல் இருப்பதற்கு ஆயில் உதவி செய்கிறது. நான்கு அல்லது ஐந்து லவங்கத் துண்டுகளை நன்றாக வெந்நீரில் ஊற வைத்து, அத்துடன் ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இவை இரண்டுக்கும் உள்ள மருத்துவ குணத்தால், முகத்தில் பருக்கள் வராமலும், எண்ணெய்ப் பசை இல்லாமலும் தடுக்கலாம். மேலும், சருமம் அதன் மென்மைத்தன்மையை இழக்காது.
பாதாம், பிஸ்தா, கசகசா மூன்றையும் அரை டீஸ்பூன் எடுத்து பாலில் ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். க்ரீம்போல வந்ததும், அதனை கழுத்திலிருந்து முகம் வரைக்கும் நல்ல அடர்த்தியாகப் போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இது, சருமத்தின் வறட்சியை நீக்கி, தேவையான எண்ணெய்ப் பசையைக் கொடுத்து முகத்தை பளபளப்பாக்கும்.

முகப் பரு

Siddha Medicine : Pimple Cure - Beauty Tips - Food Habits and Nutrition Guide in Tamil

வேப்பிலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து, அப்படியே பற்றாக முகப் பருக்களின் மீது தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பலன் தெரியும்.

ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. விலை அதிகமுள்ள சத்துள்ள பொருளைவிட அதிக சத்தைக் குறைந்த விலையில் ஏழைக்கு அளித்து நல்வாழ்வு தரக்கூடியது கரிசாலை.

காயம் பட்ட இடத்தில் மணத்தக்காளி இலையின் சாற்றைப் பிழிந்துவிட்டால், காயம் விரைவில் ஆறும்.

தினமும் ஒரு ஸ்பூன் தேனுடன் இரண்டு துளசி இலைகளைச் சேர்த்து உண்டு வருவதால் குரல் வளம் பெறும். குடல் பிரச்னைகள் பலவற்றிற்கும் இது நல்லது என்பதுடன் சருமமும் இதனால் நன்கு மேம்படும்.

பிரண்டை உப்பு அல்லது பிரண்டை பஸ்பம் (சித்த மருத்துவக் கடையில் கிடைக்கும்) இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் காலையில் ஓர் அரிசி எடை நெய்யுடனும், மறுநாள் காலையில் ஓர் அரிசி எடை இளநீருடனும் மாற்றி மாற்றி உண்டு வர உடலுக்கு எவ்விதக் கெடுதலுமின்றி நிச்சயமாக மெலிவதுடன் எடையும் குறையும்.

பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று.

Medicinal Uses of Henna in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள்.
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil - Maruthonri
English - Henna
Sanskrit - Rakta garba
Malayalam - Mailanchi
Telugu - Goranti
Hindi - Mehandhi
Botanical Name - Lawsonia inermis
கை, கால் எரிச்சல்
கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
நகக்கண்
நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.
நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
மேக நோய்கள் நீங்க
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது.
சுளுக்கு நீங்க
மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.
நல்ல தூக்கம் பெற
மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.
மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருதோன்றியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதோன்றியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள்.
டாக்டர் எமர்சன் மருதோன்றி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று கண்டறிதுள்ளனர்.
டாக்டர் எய்ன்சிலிக் மருதோன்றியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.
வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு என்று டாக்டர் ஹொன்னி பெர்க்கர் கூறுகிறார்.

முருங்கைக் கீரை


Drumsticks in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.
வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
இழைப்பண்டம் - 0.9% 
 
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் - 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

கருந்துளசி செடி



Health Benefits of Holy Basil in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.
சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.
'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.

முள்ளங்கி


Advantages and Disadvantages of Vegetables II - Food Habits and Nutrition Guide in Tamil

முள்ளங்கி (வெள்ளை)
என்ன இருக்கு: நீர்ச்சத்து, கால்சியம் (calcium) , பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.
முள்ளங்கி (சிவப்பு)
என்ன இருக்கு: கந்தகம், கால்சியம், விட்டமின் சி (Vitamin C).
யாருக்கு நல்லது: ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.
காலிஃபிளவர்
என்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது: புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ்
என்ன இருக்கு: சோடியம் (sodium), இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம்: பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.
நார்த்தங்காய்
என்ன இருக்கு: சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது: அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்

பலாக்காய்
என்ன இருக்கு: சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம்: வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு.
பலன்கள்: செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...