Friday, 20 September 2013

இசைமருத்துவம்!



இசைமருத்துவம்!
இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும்  இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள
இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.

ஆறு சுவையின் செயல்!



ஆறு சுவையின் செயல்!
காரம் - உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

ஆரோக்கியத்திற்கு!



ஆரோக்கியத்திற்கு!
தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.

ஆண்மை வலுப்பெற!



ஆண்மை வலுப்பெற!
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

ஆண்கள் மலடு தீர!



ஆண்கள் மலடு தீர!
ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.

அஜீரணசக்திக்கு



அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...