Saturday, 1 March 2014

முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை



முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்தபின் வழக்கமான பணிகளில் ஈடுபட எவ்வளவு காலமாகும்?
மைக்ரோ சர்ஜரி செய்து கொண்டவர்கள் 5 ஆம் நாளிலேயே நடக்கலாம், இருப்பினும் 10 நாள் ஓய்வுக்குப் பின் இயல்பான வாழ்க்கை முறையைத் தொடங்கலாம். ஆனாலும் 3 மாத காலத்திற்கு கடினமான வேலைகளை செய்வதை தவிர்த்தால் அறுவை சிகிச்சை முழு பலனை தரும் எனலாம்.
வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சையை உடனடி யாக தொடங்க என்னென்ன சோதனை முடிவுகள் தேவை? என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு காலமாக செய்கிறார். இடுப்பு வலிகள் எவ்வளவு காலமாக இருக்கிறது. உடலை இயக்கும் போதோ, கை, கால்களை நீட்டி மடக்கும் போதோ மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வுகள் இருந்தால், அது தொடர்பான செய்திகள், எக்ஸ்றே மற்றும் Mகீஐ ஸ்கேன் இவற்றின் முடிவுகளை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு தான் சிகிச்சையைத் தொடங்கு வோம்.
எலும்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?
புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இவை யிரண்டும் முதுகு வலியினை (Back pain) அதிகரிக்கும் முக்கிய காரணிகள். சிகரெட் குடிப்பவரைக் காட்டிலும், பீடி பிடிக்கும் வழக்கம் உள்ள வர்களை, TAO (டிராம்போ ஆண்சைனா டிரான்ஸ்) செல்கள் இரத்தத்தில் பல்கிப் பெருகி, அடைப்பினை ஏற்படுத்து கின்றன. இதனால் கல்களில் குடைச்சல்கள் உருவாகின்றன.
பெண்களுக்கு கல்சியத்தின் அன்றாடத் தேவை 1 கிராம் என்றால் மெனோபாஸுக்கு பின்னர் தேல்யான கல்சியத்தின் அளவு 3 கிராமாக அதிகரிக்கிறது. அதாவது கல் சியத்தின் தேவை 3 மடங்கு அதிகரிக் கிறது. பெண்களைப் பொறுத்தவரை, வேலை செய் யும்போது முதுகுப்பிடிப்பு ஏற்படுவ தாலும், மெனோபாஸுக்கு பின்னர் வரும் கல்சியப் பற்றாக்குறை காரண மாகவும் முதுகுவலி மற்றும் ஆஸ்டியோ பெரேசிஸ் (எலும்புக் கரைவு) ஆகியவை ஏற்படுகி ன்றன.
எலும்பியல் மருத்துவத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?
விபத்திலோ அல்லது வேறு எந்த வகை யிலோ கை, கால்கள் முழுவதுமாகச் துண்டிக் கப்பட்டு விட்டாலும், அதனை புதிதாகப் பொருத்துமளவிற்கு எலும்பியல் மருத்துவத் துறை தற்போது வளர்ந்துள்ளது. இதற்கு "ரிஇம்பிளான்ட்டேஷன்' என்று பெயரிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி முறையாகும்.
துண்டிக்கப்பட்ட உறுப்புகளை மீண்டும் பொருத்த முடியும். துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பாதுகாக்க, அருகிலுள்ள ஓடும் தூய நீரிலோ அல்லது தூய நீரிலோ அவற்றைக் கழுவி, பிளாஸ்டிக் பையால் சுற்றி, அதனை ஐஸ் கட்டியில் வைத்து, பாதுகாப்பாக எடுத்து வந்தால் (நேரடியாக உறுப் புகளை ஐஸிலோ, ஐஸ் நீரிலோ வைக்கக் கூடாது) அதனை மீண்டும் பொருத்திவிடலாம். எலும்பு முறிந்து, புண் ணாகிவிட்ட நிலையிலும், அதனை மறுசீரமைப்பு செய்யும் சிகிச்சை முறை தற்போது பெருமளவில் பயன் பாட்டிலுள்ளது.
போலியோ வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் சிகிச்சை முறைகள் உண்டா?
உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நன்றாக இயங்கும் காலில், எடையை முழுவதும் செலுத்தி நடப்பதால் 35 ஆண்டுகளில் எலும்புகள் தேய்மானமாகி விடும் வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க கால்களில் காலிப்பர்களைப் பொருத்தி, இயல்பான காலினைப் போன்று நடக்க வைக்க முடியும். இதனை முன்னாள் இந்திய குடியரசு தலைவரான அப்துல்கலாம் தலைமை யிலான அறிவியல் குழு 1992 ஆம் ஆண்டில் இதற்குரிய காலிப்பர்களை வடிவமைத்தது. இதனையே பெரும்பான் மையான மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
குதிகால் வாதம் என்றால் என்ன? அதனை குணப்படுத்த இயலுமா?
குதிகால் எலும்புக்கும் விரல்களுக்கும் இடையே "அப்போ நீயூரோசிஸ்' என்ற இணைப்பு இயல்பாக உள்ளது. முதுமை யின் காரணமாக இந்த இணைப்பில் சுருக்கம் உருவாகும் போது குதிகால் வாதம் ஏற்படுகின்றது. காலையில் தூங்கி எழுந்த வுடன், அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். 34 அடிகள் எடுத்து வைத்து நடக்கும் போது இதனால் ஏற்படும் சிரமத்தை உணரலாம்., பின்னர் இயல்பாக நடக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனைத்தான் மருத்துவ துறை குதி கால் வாதம் என்று குறிப்பிடுகின்றது. இந்த குதிகால் வாதமானது ஒரு மூட்டிலிருந்து அடுத்த மூட்டிற்குப் பரவாது.
இதனை குணப்படுத்த, சரியான முறையில் உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். MCR எனப்படும் மைக்ரோ செல்லுலார் ராப்பர், MCP எனப்படும் மைக்ரோ செல்லுலர் பாலிமர் ஆகியவற்றால் ஆன செருப்புகளை அணிவதன் மூலமும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். மணல் மற்றும் கடற்கரை மணலில் காலணி அணியாமல் நடப்பதும், மருந்து, மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி செய்து கொள்வதன் மூலமும் இதனைக் குணப்படுத்தலாம். எந்த நிலையில் இருந்தாலும் இதனை பூரணமாக குணப்படுத்த இயலும்.

முதுகு (எலும்பு) வலியால் பாதிக்கப்படாதோர்



இன்றைய சூழலில் முதுகு (எலும்பு) வலியால் பாதிக்கப்படாதோர் மிக குறைவு. இது எதனால் ஏற்படுகிறது? முழுமையாக குணப்படுத்த இயலுமா?
முதுகெலும்பில் ஏற்படும் வலியினை (Back Pain) இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. முறையற்ற உடலியக்கத்தால் வரும் பாதிப்பு (மெக்கானிக்)
2. உடலின் தோன்றும் பிற குறைகளால் வரும் பாதிப்பு (ஆர்கானிக்) முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் முறையற்ற உடலியக்கச் செயல் பாட்டினால் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிக சுமை சுமப்பவர்கள், கணனித் துறைப் பொறியியலாளர்கள் போன்றோர்கள் (நீண்ட நேரம் அமர்வதால்) இவ்வகைப் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையின் காரணமாகவும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கு சாத்திய கூறு உண்டு. இக்குறைபாட்டினைத் தவிர்க்க முதுகெலும்புகளை இயக்கும் நீச்சல், ஓட்டப்பயிற்சி (குறைந்த அளவு 20 நிமிடம்) மிதிவண்டி ஓட்டுதல், ஸ்கிப்பிங் பயிற்சி ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், உட்காருவதற்கும் படுப்பதற்கும் இடைப்பட்ட நிலையினைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இயற்கையான உடற்குறை காரணமாகத் தோன்றும் மூட்டுவலியே அறுவைச் சிகிச்சை வரை கொண்டு வருகிறது. இத்தகு பிரச்சினையை சீர்செய்ய மைக்ரோ ஸ்கோப்பைப் பயன்படுத்திச் செய்யப்படும் மைக்ரோ சர்ஜரி முறை தற்போது நடை முறையில் உள்ளது. முதுகில் செய்யப் படும் அறுவைச்சிகிச்சை, முதுகெலும்பில் உள்ள குறைபாடு, கால் போன்ற எலும்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற் கேயாகும். முதுகெலும்பிணைப்பில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையில் வலி தீருமென்று உறுதியாக கூற முடியாது. 23 இணைப்பு எலும்புகளில் ஒரு இணைப்பில் அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்தாலும், மற்ற இணைப்பிலும் பாதிப்பு பரவிடும் வாய்ப்பு களே அதிகம்.
முட்டிகளில் தேய்மானம் ஏற்படுவதைப் போல, முதுகெலும்பில் தேய்மானம் ஏற்ப டலாம். இதற்கு பிஸியோதெரபி ஊசி மருந் துகள் மூலம் நிவாரணம் காணலாம். இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் இணையும் மூட்டுகளிலும் கூட தேய்மானப் பிரச்சினை ஏற்படு வதற்கு வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தூக்கத்தில் புரண்டு படுக்கும்போதும், உட்காரும் போதும் வலியை உணர்வர். முதுகெலும்பும், இடுப்பெலும்பும் இணைந்துள்ள காரணத்தால் நடக்கத் தொடங்கும் 45 அடிகளைக்கூட வைக்க முடியாத அளவுக்கு வலியை உணர்வர். பின்னர் இயல்பாக நடக்க ஆரம்பித்து விடுவர். முதுகு வலியைப் பொறுத்தவரை முழுமையாக குணம் பெறுவது மருத்துவர்களின் ஆலோச னையை தீவிர கவனத்துடன் பின்பற்று வதன் மூலமே சாத்தியப்படும்.
முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்தபின் வழக்கமான பணிகளில் ஈடுபட எவ்வளவு காலமாகும்?
மைக்ரோ சர்ஜரி செய்து கொண்டவர்கள் 5 ஆம் நாளிலேயே நடக்கலாம், இருப்பினும் 10 நாள் ஓய்வுக்குப் பின் இயல்பான வாழ்க்கை முறையைத் தொடங்கலாம். ஆனாலும் 3 மாத காலத்திற்கு கடினமான வேலைகளை செய்வதை தவிர்த்தால் அறுவை சிகிச்சை முழு பலனை தரும் எனலாம்.
வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சையை உடனடி யாக தொடங்க என்னென்ன சோதனை முடிவுகள் தேவை? என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு காலமாக செய்கிறார். இடுப்பு வலிகள் எவ்வளவு காலமாக இருக்கிறது. உடலை இயக்கும் போதோ, கை, கால்களை நீட்டி மடக்கும் போதோ மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வுகள் இருந்தால், அது தொடர்பான செய்திகள், எக்ஸ்றே மற்றும் Mகீஐ ஸ்கேன் இவற்றின் முடிவுகளை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு தான் சிகிச்சையைத் தொடங்கு வோம்.

எலும்புத் தொடர்பாக இளவயதினரை அதிகமாக பாதிக்கும் பிரச்சினை எது?



எலும்புத் தொடர்பாக இளவயதினரை அதிகமாக பாதிக்கும் பிரச்சினை எது?
மூட்டுகளுக்கு இடையே நிகழும் உராய்வினைத் தடுக்க ஒருவகையான திரவம் இயல்பிலேயே நமது உடலில் இருக்கிறது. இதன் அடர்த்தி குறைந்து வருவது தான், எலும்பு தேய்மானத்தின் முதல் நிலை. (அதாவது எண்ணெய் போல் இருக்க வேண்டிய திரவம், அடர்த்தி குறைந்து தண்ணீர் போல் ஆகிவிடுவது). இது தான் இன்றைய இளைய தலை முறையினரை பெருமளவில் பாதிக்கிறது.
அதிலும் குறிப்பாக, 35-40 வயதுள்ளவர்களைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய "ஜெல்' போன்ற ஊசிகள், மூட்டுகளில் செலுத்தப்படுகின்றன. இது உராய்வைக் குறைக்கும் திரவத்தின் அடர்த்தியைக் அதிகரிக்கிறது. இக்குறைகளைச் சீர்செய்ய தொடர்ச்சியாகப் போடப்படும் ஊசிகளும் தற்போது உள்ளன. இது போன்ற சிகிச்சைகள் பலனளிக்காமல், தேய்மானம் மிகவும் முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே மூட்டினை மாற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப் பரிந்துரைக் கபடுகிறது.
மூட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து கொண்டால் வலி இருக்காது. ஆனால் இயல் பாக எந்த அளவுக்கு (90 120 டிகிரி) மூட்டினை இயக்கும் இயல்பு உள்ளதோ, அதே அளவில் மூட்டு மாற்று அறுவைசிகிச் சைசெய்த பின்னும் இருக்கும் என்று உறுதி யாக கூற இயலாது. அதே தருணத்தில் மாற்று றப்பர்போல் தண்டு செயல்படும் என நினைப்பது தவறு.

சர்க்கரை வியாதி




சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.
அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Sevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.
இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.
இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர்.
மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.
அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.
1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.
1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.
ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.
1988ம் ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.
இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.
அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,
நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.
ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.
ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது என்றார்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...