Saturday, 23 August 2014

கை-கால் வீக்கம்:



கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

பொன்மேனி தரும் குப்பைமேனி: குப்பை மேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர குணமாகும்.

தேள்கடியை விரட்டும் குடியோட்டிப்பூண்டு: பிரம்ம தண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். வயிற்றுவலி போக்கும் நறுவி நறுவிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப்பால் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

காற்று சுத்திகரிப்பான் சர்க்கரை: சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக் காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

தலைபாரம் நீக்கும் கிராம்பு: கிராம்பை நீர்விட்டு மை போல் அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் குணமாகும்.

காயத்துக்கு காட்டாமணக்கு: காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப்பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

உப்பலுக்கு உப்பிலாங்கொடி: மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணப்பட்டால், உப்பிலாங்கொடியை அரைஞானில் கட்டத் தீரும்.

மயக்கத்துக்கு ஏலம்: ஏலக்காய் 1 பங்கு, யக்கம் நீங்கும். பனைவெல்லம் 1/2 பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

படர் தாமரைக்கு: அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச நோய் தீரும்.

பல் ஈறு, வீக்கம் வக்கு: கிராம்பு, கற்பூரம், ஒமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து கிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

மலச்சிக்கலுக்கு: பிஞ்சுகடுக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், எடுத்து தட்டி 1 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும் பொழுது குடித்துவிட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

Monday, 21 April 2014

தர்பூசணி நல்ல ஒரு நீராகாரம், தாகத்தை தணிக்கும்.

Watermelon Juice - Cooking Recipes in Tamil
கோடையில் குளு குளுன்னு இருக்க தர்பூசணி சாப்பிடுங்க.. தாகத்தை தீர்க்கும் தர்பூசணி உடலுக்கு ரொம்ப நல்லது. ரொம்ப பசியா உள்ளவர்கள் தர்பூசணி நாலு துண்டு சாப்பிட்டாலும் வயிறு திம்முனு இருக்கும், பசியே எடுக்காது....
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 4
சர்க்கரை (அ) தேன் - சிறிது
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - அரை சிட்டிகை
ஐஸ் கியுப்ஸ் - 6
செய்முறை:
நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும்.
பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.
மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.
அப்படி வடிகட்ட முடியவில்லை என்றால், மிக்சியில் அடித்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைகள் தங்கிடும், மிகவும் கலக்காமல் அப்படியே தெளிந்த மாதிரி டம்ளரில் ஊற்றி பருகவும்.
ஆஹா! என்ன.. ஒரு புத்துணர்வு. கண்ணெல்லாம் குளிர்ந்து விடும்.
குறிப்பு:
தர்பூசணி நல்ல ஒரு நீராகாரம், தாகத்தை தணிக்கும்.
இனிப்பில்லாத தர்பூசணி பழத்தை சின்னதா கட் செய்து அதில் சர்க்கரை சேர்த்து குளிர வைத்து குடித்தாலும் நல்லா இருக்கும்.
இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்கலாம்.
இதன் தோலை வீணாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டிய முழுவதையும் தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேஜை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.
தர்பூசணியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்.

கடலைபருப்புபளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

Channa Dal Beauty Pack - Beauty Care and Tips in Tamil

என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா? உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு "பேக்"......
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம்.... இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.
வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
எண்ணெய் வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பரு தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலை பருப்பில் அட்டகாசமான சிகிச்சை இருக்கிறது.
கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச வேண்டும்.
தொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்.... பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
முகம், உள்ளங்கை, அக்குள் என்று வியர்வை படியும் இடங்களில் பூசிக் குளிப்பதற்கென்றே அசத்தலான வாசனை வைத்தியம் இருக்கிறது கடலை பருப்பில்.
கடலை பருப்பு அரை கிலோ, துண்டங்களாக்கிய வெட்டிவேர் 10 கிராம். கிழங்கு மஞ்சள் 10 கிராம்.... இந்த மூன்றையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக்கி, தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதுபோல், உடம்பு முழுவதும் பூசி குளித்து வர, வியர்வை தொல்லை இனி இல்லை என்ற சந்தோஷ சிறகடிக்கலாம்.
தலை கசகசவென வியர்த்துக் கொட்டி, கூந்தல் எப்போதும் பிசுபிசுப்புடன் மங்கலாகவே இருக்கிறதா? பளபளக்கிற ஹேர் ஸ்டைலுக்கெல்லாம் நாம் கொடுத்துவைக்கவில்லை என்று கவலைப்பட்டது போதும். உங்களுக்கே உங்களுக்கான சிறப்பு கடலை பருப்பு சிகிச்சை இதோ...
கடலை பருப்பு அரை கிலோ. வெட்டி வேர் 10 கிராம். உலர்ந்த செம்பருத்திப்பூ 200 கிராம்... இந்த மூன்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடருடன் கற்றாழை ஜெல்லை குழைத்து, தலையின் எல்லா பாகங்களிலும் படும்படி "பேக்" ஆகப் போடுங்கள். பத்து நிமிடம் கழித்து, தலையை நன்றாகத் தேய்த்து நிறைய தண்ணீர் விட்டு அலசுங்கள்.
இதை வாரம் இரு முறை செய்துவந்தால், பிசுபிசுப்பு நீங்கி, கூந்தல் பளபளக்கும்.
உச்சந்தலை, முன்பகுதி, வகிடு போன்ற "தலை"யாய ஏரியாக்களில் முடி உதிர்ந்து மண்டையோடே பலருக்கு வெளியே தெரியும். வயதை சற்றே அதிகரிக்துக் காட்டுகிற இந்தத் தோற்றத்தை யார்தான் விரும்புவார்கள்? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது, கடலை பருப்பிடம்!
கடலை பருப்பு 2 டீஸ்பூன். கசகசா அரை டீஸ்பூன். கொட்டை எடுத்த புங்கங்கொட்டை தோல் 3. வெங்காயச்சாறு 1 டீஸ்பூன் அல்லது 3 சின்ன வெங்காயம்.... இவற்றை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். முடி உதிர்ந்த பகுதிகளில் இந்த விழுதை வைத்து 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, பிறகு அலசுங்கள்.
வாரம் இரு முறை இப்படிச் செய்து வர. முடி உதிர்வது நின்று கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி முளைக்கும்.
தேமலும் கரும்புள்ளிகளும் அழகைக் கெடுக்கும் அரக்கர்கள்! இவர்களை விரட்டியடிக்கவும் வழி வைத்திருக்கிறது கடலை பருப்பு.
கடலை மாவு 1 டீஸ்பூன். பசு மஞ்சள் விழுது 1 டீஸ்பூன், தேன் 1 துளி, எலுமிச்சைச்சாறு 4 துளி இவற்றை பேஸ்ட் போலாக்கி, தேமல் உள்ள பகுதியில் பூசி, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.
இப்படி செய்து வந்தால் கரும்புள்ளியும் தேமலும் இருந்த தடம்கூடத் தெரியாமல் தேகம் மின்ன, "யார் இந்த தேவதை?" என்று ரகசியம் பேசுவார் உங்களவர்.
கழுத்தைச் சுற்றிலும் சிலருக்கு கறுப்பு கறுப்பாக வளையம் விழுந்து கவலை வளையத்தை ஏற்படுத்திவிடும் இதற்கான தீர்வு.
கடலை பருப்பு கால் கிலோ, பார்லி கால் கிலோ இரண்டையும் தனித்தனியே அரைத்து வையுங்கள். இரண்டிலிருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் பொடியாக்கிய பச்சை கற்பூரத்தை கடுகளவும் , முல்தானி மட்டியை 1 சிட்டிகையும் சேர்த்து, கழுத்தைச் சுற்றி பூசி காய்ந்ததும் அலசுங்கள்.
தினமும் இதைச் செய்து வர, கழுத்து "வரி"கள் காணாமல் போய்விடும்

அதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக..

Home remedies for glowing skin summer - Skin Care Tips - Beauty Care and Tips in Tamil

"பியூட்டி பார்லருக்கு" செல்லாமல், நம் வீட்டு சமையலறை மற்றும் ஃபிரிட்ஜ்லிருக்கும் தயிர், வெண்ணெய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள், குங்குமப்பூ போன்ற பொருட்களை பயன்படுத்தியே நமது முகத்தை அழகு படுத்திக் கொள்ளலாம்.
அதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக....
* தயிருடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். எலுமிச்சை பழத் தோலை காய வைத்து, அதை அரைத்து அந்த பொடியையும் இதனுடன் சேர்த்து முகத்தில் தடவலாம்.
* வெள்ளரிக்காயின் சதைப்பகுதியுடன் தயிர் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இது, ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.
* வெள்ளரிக்காய், பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி ஆகியவற்றை தயிருடன் சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வர முகம் பட்டு போல ஜொலிக்கும்.
* பச்சரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, இதை தயிரில் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவ, முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாமுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வர, முகம் பொலிவுறும்.
* கை முட்டிப் பகுதி சிலருக்கு, கறுப்பாக காணப்படும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதை கை முட்டிப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வர, கறுமை மறையும். அதே போல், காப்பித் தூளுடன், சர்க்கரை சேர்த்தும் தேய்க்கலாம்.
* முலாம்பழத்தை சாறெடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர முகம் பொலிவு பெறும்.
* தர்ப்பூசணி பழச் சாறெடுத்து, அதை முகத்தில் பூச வேண்டும். அது காய்ந்து நன்கு இறுக்கமானது தெரிந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் பளபளப்பாக காணப்படும். இந்த, "பேஸ் மாஸ்க்"கை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
* மாம்பழச் சாறை பஞ்சால் முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

அழகு குறிப்புகள் முகம் பொலிவு

Simple Beauty Tips - Beauty Care and Tips in Tamil
அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாக(நேரத்திலும்தான்) செய்ய கூடிய டிப்ஸஸ்தான் கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்.. மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!

* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.
* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.
* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.
* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.
* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.
* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.
* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.
* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.
* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.
* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.
* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.
* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.
* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.
* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.
* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.
* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.
* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.
* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.
* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.
* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.
* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.

சிறுமிகள்7 அல்லது 8 வயதுக்கு உள்ளாகவே பூப்படைகின்றனர்.


Why do girls attain Puberty earlier? - Child Care Tips and Informations in Tamil
சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் நீராட்டு விழா ஒவ்வொரு சிறுமியின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. 12 முதல் 14 வயதுக்குள்தான் பெண்கள் பருவமடைந்து வந்தனர். இந்த நிலை மாறி தற்போது 7 அல்லது 8 வயதுக்கு உள்ளாகவே பூப்படைகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் உள்ளது. பருவத்தை அடையும் முன்பு சிறுமிகளிடம் ஏற்படும் முதல் மாற்றம் என்ன? மிகச் சிறிய வயதில் சிறுமிகள் ஏன் பூப்படைகின்றனர்? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் வகையிலும் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவப் பள்ளி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து சமீபத்தில் புதிதாக ஒரு ஆய்வு நடத்தின.
ஆய்வுக்காக 6 வயது முதல் 8 வயது வரை உள்ள ஆரோக்கியமான உடல் தகுதி, சரியான உடல் எடை, அதிக பருமன் உள்ளவர்கள், நிற பேதங்கள் உள்ளவர்கள், என பலதரப்பை சேர்ந்த 1,239 சிறுமிகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
ஆய்வு முடிவு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது:
சிறுமிகளின் உடல் எடை, அவர்களின் உணவு மற்றும் இதரப் பழக்கங்கள், நிறம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பூப்படைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
அதிக உடல் எடையால் உடலில் உள்ள கொழுப்பு சத்து செக்ஸ் ஹார்மோன்களை விரைவில் தூண்டி அதிக அளவு சுரக்கச் செய்கின்றன. சிறு வயதிலேயே சிறுமிகள் வயதுக்கு வர இது முக்கிய காரணம். அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக வளர்ச்சியை தூண்டுகின்றன. அதனால், பூப்படையும் முன்பே மார்பகங்கள் வளர்ச்சி பெருகின்றன.
உடலின் நிறத்துக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. சிவப்பு நிறத்தில் உள்ள சிறுமிகள் முன்கூட்டியே பூப்படையும் வாய்ப்பு குறைவு. கருப்பு நிற சிறுமிகள் முன்கூட்டியே பூப்பெய்துகின்றனர். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி குறித்து வெளியாகும் சிறப்பு மருத்துவ இதழில் இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது


Drinking Water Cares Your Skin - Beauty Care and Tips in Tamil
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!
தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?
அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!
தண்ணீர் மருந்து
"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.
ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!
வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை உடம்புக்கு நல்லது!
குளிப்பதற்கு முன் - ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).
இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேமலை விரட்டுங்க!
நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
மெருகுக்கு பப்பாளி!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...