Friday, 22 April 2016

மனகவலை எனும் குரங்கு!

#மனகவலை எனும் குரங்கு!

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ,
" எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
குரங்கோ ,
"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது . அவர் மீண்டும் சொன்னார் ,
" பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".
அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .
"இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
விட்டொழியுங்கள்.
சந்தோசமாய் இருங்கள்,..

Tuesday, 24 March 2015

monthly book



ePyh fy;ahzNk itNghfNk
jkpo; khj ,jo;
Mz;L re;jh 200U
cq;fs; Kftup
nry; ek;gu;
mDg;gTk;
njhlh;g;G
  G.v.kzpfz;l ~h;kh
 nrd;id-37
9444226039
9962225358

Tuesday, 3 March 2015

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி


·     தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி
·     ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, , பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது.

தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.  

தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி ஜுஸ், பாயசம், ஸ்வீட், ஐஸ்கிரீம் என இதில் ஏராளமான உணவுப்பொருட்களும் தயாரிக்கிறார்கள். மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம், தர்பூசணியில் தற்போதுதான் சாத்தியமாகிவருகிறது. தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இயற்கை வயக்ரா

தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது.  இதில் உள்ள பைட்டோ  நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.  தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஆனால் பலருக்கும் இது தெரியாததால், இனிப்பான சிவப்பு பகுதியை சுவைத்தவுடன் மீதம் உள்ள தோலை அப்படியே எறிந்து விடுகின்றனர். தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது, அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு ஆசையை அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  தர்பூசணியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வெள்ளைப்பகுதியையும் மறக்காமல் சாப்பிடுங்கள். நாவுக்கு வேண்டுமானால் அப்பகுதி சுவையில்லாமல் இருக்கலாம் ஆனால் இல்லற சுவையை கூட்டுவதில் அது வயாக்ராவுக்கு சவால் விடும் பகுதி என்பதை மறந்து விட வேண்டாம்.

கறி சம்சா


கறி சம்சா




தேவையான பொருள்கள் :
 
கொந்திய கறி - 200 கிராம்
வெங்காயம் - 3 
மைதா மாவு - 1 க‌ப்
இஞ்சி, பூ‌ண்டு ‌
சோம்பு பட்டை லவங்கம் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - பொ‌ரி‌க்க தேவையான அளவு
டால்டா - 100 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உ‌ப்பு
 
செய்முறை : 
 
கொந்தின கறியை அல‌சி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு, 1 ட‌ம்ள‌ர் நீர்ஊற்றி வேக வைக்க வேண்டும். க‌றி வெ‌‌ந்தது‌ம் அ‌தி‌ல் நறு‌க்‌கிய வெ‌ங்காய‌த்‌தி‌ல் பா‌தியையு‌ம், உ‌ப்பையு‌ம் சே‌ர்‌த்து மேலு‌ம் அரை ம‌ணி நேர‌ம் வே வை‌‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவும‌்.
 
இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை மி‌க்‌சி‌யி‌ல் சிறிது நீர் தெளித்து அரை‌த்து‌க் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ‌வி‌ட்டு, மீதமுள்ள வெங்காயத்தையும், நசுக்கி வைத்துள்ள மசாலாவையும் போட்டு, வேக வை‌த்த க‌றியையு‌ம் சே‌ர்‌த்து வதக்கவு‌ம். நீர் சுண்டி கறி சிவந்தவுடன் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
மைதாமாவைச் சலித்து, கால் தேக்கரண்டி உப்பு கரைத்த நீரைத் தெளித்து 70 கிராம் டால்டாவைக் காய்ச்சி ஊற்றி பூரிக்கு பிசைவது போல் பிசைந்து வட்டமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். 
 
திரட்டிய பூரிகளை, கத்தியினால் இரண்டு சம பாகங்களாக அறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அரை பூரியை எடுத்து அதன்மத்தியில் அரை தேக்கரண்டி கறி வறுவலை வைத்து, பூரியை முக்கோணமாக மடித்துவிட வேண்டும். இவ்வாறு எல்லா பூரிகளையும் சம்சாவாகச் செய்து கொள்ள வேண்டும். 
 
அடுப்பில் வாணலியை வைத்து, டால்டாவை ஊற்றிக் காய்ந்ததும், இரண்டு அல்லது மூன்று சம்சாவாக‌ப் போட்டுச் சிவந்தபுடன் எடுத்துவிட வேண்டும். அடுப்பை மிகவும் சிறியதாக எரிய விட வேண்டியது அவசியம்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...