1. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்2. அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம்
Saturday, 7 January 2017
கூந்தல் பளபளக்க
கூந்தல் பளபளக்க1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில்விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில்உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல்பளபளப்பாகும்.
‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?
சில நேரங்களில் உங்களுக்கு எளிதில் கோபம், எரிச்சல், அழுகை, உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதா? அல்லது உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா?ஆம் என்றால், உங்களுக்கு மாதவிடாய் வர இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று கணக்குப் போடுங்கள். ஒரு வேளை 14 முதல் 2 நாட்களாக இருக்கலாம். உடல் மற்றும் மன அளவில்வெளிப்படும் மேற்கண்ட அறிகுறிகளைத்தான் ‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ (pre menstrual syndrome) என்கிறோம்.‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும் மன அளவிலும் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசௌகரியங்கள் மறைந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நடைபெறும்போது பல பெண்களேகூட அதைஉணர்வதில்லை. இவை சுமார் 70 சதவீதப் பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாதாமாதம் நடைபெறும் இந்தமாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்கச்செய்துவிடும்!இந்த அசௌகரியங்கள் ஏன் ஏற்படுகின்றன?இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் இந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் நடத்தை சார்ந்த காரணங்களும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக அமையலாம்!மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்!வயிறு உப்புசம், பசியின் அளவில் மாற்றம், மார்பகங்களில் வலி அல்லது கனமாகத் தோன்றுவது, உடல் மற்றும் மனச் சோர்வு, தலைவலி,மூட்டு மற்றும் தசைகளில் வலி, முதுகு வலி, உடலில் நீர் கோர்த்துக்கொள்வது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, குறிப்பிட்ட உணவுகளுக்காக ஏங்குவது, பதற்றம், அடிக்கடி மனநிலை மாறுவது, தூக்கமின்மை ஆகியன!இந்த அறிகுறிகள் மாதத்துக்கு மாதம் வித்தியாசப்படலாம்!பெண்கள் அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்வது, குடும்பத்தார் மற்றும் அடுத்தவருடன் சண்டை போடுவது போன்றவை இந்த நேரங்களில்தான் அதிகம்நிகழ்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுவதால் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பதே இதற்குக் காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நேரங்களில் உடலையும் மனதையும் நன்கு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்!சிகிச்சை முறைகள்!*.உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாறுதல்களைத் தொடர்ந்து குறித்துக்கொண்டு வந்தால், எந்த மாதிரிச் சூழ்நிலைகளின்போது அந்த மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்த சூழ்நிலைகளுக்கானக் காரணங்களைத் தடுக்கலாம்.*.இந்த நேரங்களில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறைத்துச் சாப்பிடவும்.*.காபி தவிர்ப்பது நல்லது.*.அதிக நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும்.*.திடீர் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.*.உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது.*.உடலிலும் மனதிலும் ஏற்படும் இந்த மாறுதல்கள் மிகவும் பாதிப்பாக இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகவும்.யோகா எப்படி உதவுகிறது?*.யோகா நமது நரம்பு மண்டலத்தை தளர்வான நிலையில் இருக்கச் செய்கிறது. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது குறைகிறது.*.யோகா நமது ஹார்மோன்களின் அளவுகளைச்சமநிலைப்படுத்துகிறது.*.யோகாவின் மூலம் நமது உடலையும் மனதையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடிகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாமல் பதற்றமாக நாம் செய்யும் பல செயல்களைத் தடுக்க முடிகிறது.*.யோகாசனங்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தைச் சீர்செய்கிறது.*.வளர்சிதை மாற்றம் சீராவதால் குறிப்பிட்ட உணவுக்கான ஏங்குதல்கள் குறைகின்றன.ஆண்களும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் குடும்ப உறவுகள் மேம்படும்!
பீரியட்ஸ் வலி குறைய
பனி நாட்களில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பை சுருங்கி விரிவது வழக்கத்தை விட அதிகமா இருக்கும்.இதனால் மாதவிடாய் வலி சற்றுக் கூடுதலா இருக்கும். கடுகுஎண்ணெய் + விளக்கெண்ணெய் இரண்டையும் சேர்த்து இரும்புக் கரண்டியில் சூடு பண்ணி அடிவயிற்றில் தேய்த்து வெந்நீரால் கழுவ, கருப்பை சுருங்கி விரிவது நார்மல் ஆகும்; வலியும் குறையும்.
மாதவிடாய் கால வலி சரியாக
மாதவிடாய் மூன்று நாள் வலிஉடலில் ஏற்படுத்தும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படுத்தும் சோர்வுகள் தீண்ட தகாதவர்களாக்கி திண்ணையிலேயே உட்கார வைக்கும் சமூக கட்டுப்பாடு என்னும் சவுக்கடிகள், இதுவெல்லாம் போதாதென்று, மாதவிடாய் நேரத்தில் மக ளிரின்சருமத்தில் தோன்றி காலமெல்லாம் கவலைப்பட வைக்கும் ஊறல்,அரிப்பு, செம்மேகம், கருமேகம் மற்றும் வெள்ளைப் படுதல் போன்ற நோய்கள் வேறு.மாதவிடாயை மையமாக கொண்டு பெண்கள் வாழ்விலே பெரும் புயலாய் சுழன்று அடிக்கும் இந்த சூறாவளிகள் அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி வருத்தமே வாழ் வாய் ஆக்கிவிடக் கூடியவை.முக அழகை கெடுக்கும் முகப் பருக்கள், கண்ணில் தோன்றும் கரு வளையம், உடல் உறவில் திருப்தியின்மை, அதனால் உண்டாகும் நிரந்தர பரிதவிப்பு, மன உளைச்சல், குழந்தையின்மை, இடுப்பு, தொடை, முதுகு ஆகிய பகுதிகளில் உண்டாகும் அதிகமான சூடு, தாங்க முடியாத எரிச்சல், பசியின்மை இவை யெல்லாம் மாதவிடாய் கோளாறுகள் மகளிருக்கென்ற அள்ளித் தரும் விசேஷ பரிசுகள்.இவைகளை தடுக்க தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.பெரிதுவாக எல்லாப் பெண்களுக்கும் மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒரு முறை வரவேண்டும். அதாவது பெண்கள் கணக்கிலே பிப்ரவரி மாதம்தான் சரியான மாதம் என்று வைத்துக் கொள்ளலாம். வழக்கமாக மூன்று முதல் ஐந்து நாட்கள் மாதவிடாய் நீடிக்கும். ஆனால் 24 நாட்களுக்கு குறைவான நாட்களில் மாதவிடாய் தொடர்ந்து வருவதோ, 45 நாட்களுக்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு முறை விடுவதோ, வீரிய தாது சரிவிகித மின்மையின் அடையாளமாகும். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.மாதவிடாய் ஒரு மாதம் தவறிப் போகிறது அல்லது தள்ளிப் போகிறது என்றாலே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். கல்யாணமாகி அப்போதுதான் கர்ப்பமான பெண்களை இங்கே சொல்ல வில்லை. அவர்களுக்கு இது சந்தோஷத்தை தரும் சமாச்சாரம்தான். ஆனால் மற்றவர்களுக்கோ நமது மருத்துவ ஆலோசனை.மாதவிடாய் அழற்சி சரியாக:பார்லி நீரை தினமும் பருகலாம். கண்டங்கத்திரிவேர், நெருஞ்சி, பூவரசம் பட்டை, சுரைக்கொடி, ஆகியவற்றை வதக்கி அதில் ஒரு பலம் அதாவது 35 கிராம் எடுத்து ஒரு படி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீர் எட்டில் ஒரு பங்காக வற்றிய பின்னர் அதை காலை, மாலை அருந்தி வருவது உடல் உஷ்ணத்தை தணிக்கும். முள்ளங்கி, வாழைத்தண்டு, பூசணி, தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்டு வருவது காரம் அறவே நீக்கிவிடுவது அவசியம
பனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்!
பனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்!பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும். சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...

-
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகள்:- குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகை...
-
முடி வளர -முடி கருக்க - அணு தைலம் ( ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி) தேவையான மருந்துகளும் செய்முறையும்: ...
-
தைராய்ட் நோயை குணப்படுத்தும் - காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU) ( சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட) தேவையான மருந்துகளும் செய்ம...