Saturday, 7 January 2017

மாதவிடாய் கால வலி சரியாக

மாதவிடாய் மூன்று நாள் வலிஉடலில் ஏற்படுத்தும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படுத்தும் சோர்வுகள் தீண்ட தகாதவர்களாக்கி திண்ணையிலேயே உட்கார வைக்கும் சமூக கட்டுப்பாடு என்னும் சவுக்கடிகள், இதுவெல்லாம் போதாதென்று, மாதவிடாய் நேரத்தில் மக ளிரின்சருமத்தில் தோன்றி காலமெல்லாம் கவலைப்பட வைக்கும் ஊறல்,அரிப்பு, செம்மேகம், கருமேகம் மற்றும் வெள்ளைப் படுதல் போன்ற நோய்கள் வேறு.மாதவிடாயை மையமாக கொண்டு பெண்கள் வாழ்விலே பெரும் புயலாய் சுழன்று அடிக்கும் இந்த சூறாவளிகள் அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி வருத்தமே வாழ் வாய் ஆக்கிவிடக் கூடியவை.முக அழகை கெடுக்கும் முகப் பருக்கள், கண்ணில் தோன்றும் கரு வளையம், உடல் உறவில் திருப்தியின்மை, அதனால் உண்டாகும் நிரந்தர பரிதவிப்பு, மன உளைச்சல், குழந்தையின்மை, இடுப்பு, தொடை, முதுகு ஆகிய பகுதிகளில் உண்டாகும் அதிகமான சூடு, தாங்க முடியாத எரிச்சல், பசியின்மை இவை யெல்லாம் மாதவிடாய் கோளாறுகள் மகளிருக்கென்ற அள்ளித் தரும் விசேஷ பரிசுகள்.இவைகளை தடுக்க தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.பெரிதுவாக எல்லாப் பெண்களுக்கும் மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒரு முறை வரவேண்டும். அதாவது பெண்கள் கணக்கிலே பிப்ரவரி மாதம்தான் சரியான மாதம் என்று வைத்துக் கொள்ளலாம். வழக்கமாக மூன்று முதல் ஐந்து நாட்கள் மாதவிடாய் நீடிக்கும். ஆனால் 24 நாட்களுக்கு குறைவான நாட்களில் மாதவிடாய் தொடர்ந்து வருவதோ, 45 நாட்களுக்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு முறை விடுவதோ, வீரிய தாது சரிவிகித மின்மையின் அடையாளமாகும். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.மாதவிடாய் ஒரு மாதம் தவறிப் போகிறது அல்லது தள்ளிப் போகிறது என்றாலே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். கல்யாணமாகி அப்போதுதான் கர்ப்பமான பெண்களை இங்கே சொல்ல வில்லை. அவர்களுக்கு இது சந்தோஷத்தை தரும் சமாச்சாரம்தான். ஆனால் மற்றவர்களுக்கோ நமது மருத்துவ ஆலோசனை.மாதவிடாய் அழற்சி சரியாக:பார்லி நீரை தினமும் பருகலாம். கண்டங்கத்திரிவேர், நெருஞ்சி, பூவரசம் பட்டை, சுரைக்கொடி, ஆகியவற்றை வதக்கி அதில் ஒரு பலம் அதாவது 35 கிராம் எடுத்து ஒரு படி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீர் எட்டில் ஒரு பங்காக வற்றிய பின்னர் அதை காலை, மாலை அருந்தி வருவது உடல் உஷ்ணத்தை தணிக்கும். முள்ளங்கி, வாழைத்தண்டு, பூசணி, தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்டு வருவது காரம் அறவே நீக்கிவிடுவது அவசியம

No comments:

Post a Comment

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...